Death File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 04, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பாகலகுண்டே காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உடற்பயிற்சி கூடம் (Gym) ஒன்று அமைந்துள்ளது. இங்கு தாவணகெரே பகுதியை சேர்ந்த மல்லன் கவுடா-ஜோதி தம்பதியின் மகள் சராவணி (வயது 22) என்ற இளம்பெண் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இதற்காக தாசரஹள்ளியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்துள்ளார். சராவணிக்கு, திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். Electrocution Death in 22 Seconds: மூங்கில் தடியில் பாய்ந்த மின்சாரம்.. 35 வயதுடைய இளைஞர், 22 நொடிகளில் பரிதாப மரணம்.!

இதன்காரணமாக, கடந்த 2 நாட்களாக அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று காலையில் சராவணி வழக்கம்போல உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார். அங்கு திடீரென மயக்கம்போட்டு கீழே விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாகலகுண்டே காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் செய்துகொள்ள தாய் வற்புறுத்தியதால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.