Minor Girl Rape Case in UP (Photo Credit: @azizkavish X)

ஜூன் 06, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் (Lucknow) உள்ள ஆலம்பாக் ரயில் நிலையத்தில், நேற்று (ஜூன் 05) ஒரு வாலிபர் தனது தாயின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் (Minor Girl Rape) செய்தார். பின்னர், சிறுமியை இரத்த வெள்ளத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து, சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியின் அந்தரங்க உறுப்பு மோசமாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. உடல் முழுவதும் பற்கள் கடித்ததற்கான அடையாளங்கள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Meerut Shocker: பெற்ற மகளை கொன்று தலை துண்டிப்பு.. தாய் கொடூர செயல்..!

என்கவுன்டரில் சுட்டுக்கொலை:

இதுகுறித்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியை பலாத்காரம் செய்தவர், ரயில்வே நிலையத்தில் தண்ணீர் விற்பனையாளராக வேலை பார்த்து வரும் தீபக் வர்மா என்பது தெரியவந்தது. சிசிடிவி கேமராக்கள் மூலம் அவரை கண்டுபிடித்தனர். இந்நிலையில், இன்று (ஜூன் 06) காலை, அலம்பாக்கில் ஸ்கூட்டரில் சென்ற தீபக் வர்மாவை காவல்துறையினர் துரத்தினர். தன்னை சுற்றி வளைத்ததைக் கண்ட அவர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதன் பின்னர், காவல்துறையினர் அவரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.