Visual Taken from Video (Photo Credit: @Benarasiyaa X)

டிசம்பர் 09, அலிகார்க் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார்க் மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி, அங்குள்ள போஜ்புரா காவல் நிலையத்திற்கு பாஸ்போர்ட் சரிபார்ப்பு நிகழ்வுக்காக தனது மகனுடன் சென்றுள்ளார். அச்சமயம், அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் சர்மா என்பவரிடம், கடைநிலை காவலர் தனது கைத்துப்பாக்கியை ஒப்படைத்து இருக்கிறார்.

பெண்ணின் தலையில் பாய்ந்த குண்டு: அதனை அதிகாரி சரிபார்த்துக்கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக பாஸ்போர்ட் சரிபார்ப்பு பணிக்காக வந்திருந்த பெண்ணின் தலையை துப்பாக்கிக்குண்டு பதம்பார்த்தது. காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியை கையில் வைத்திருந்தபோதே, லேசான அழுத்தம் ஏற்பட்டு குண்டு பாய்ந்ததாக தெரியவருகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை: இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்மணி தற்போது ஜவஹர்லால் நேரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தலையில் உள்ள துப்பாக்கிக்குண்டை வெளியே எடுக்க மருத்துவர்கள் தேவையான முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். பெண்ணின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. Mexico Drug Smuggling Gang Fight:போதைப்பொருள் கடத்தல் கும்பல் வெறிச்செயல்: பொதுவெளியில் நடந்த துப்பாக்கிசூடு.. 11 பேர் பரிதாப பலி.! 

உறவினர்கள் போராட்டம்: துப்பாக்கிசூடு விவகாரம் தொடர்பாக தகவல் அறிந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், காவல் உதவி ஆய்வாளர் பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு லஞ்சம் கேட்டதாகவும் தங்களின் குற்றச்சாட்டை முன்வைத்தனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலாநிதி நெய்தனி, உறவினர்களின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

பதைபதைப்பு சிசிடிவி காட்சிகள்: மேற்கூறிய சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவலர் துப்பாக்கியை ஒப்படைத்ததும், அதிகாரி அதனை சரிபார்த்தபோதே துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்த பதைபதைப்பு காணொளியும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

சேதுபதி திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள்: முன்னதாக தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சேதுபதி திரைப்படத்தில், கதாநாயகனை சர்ச்சையில் சிக்கவைக்க துப்பாக்கியை எடுத்ததும் சுடும் வகையில் காவலர் ஒருவர் ஏற்பாடு செய்திருப்பார். இதுதெரியாமல் விஜய் சேதுபதி பள்ளி மாணவர் ஒருவரை மிரட்ட துப்பாக்கியை காண்பித்த காட்சிகளின்போது, தவறுதலாக கைபட்டதும் குண்டு வெளியே பாய்ந்து சிறுவன் படுகாயம் அடைவார்.

விசாரணை நடைபெறுகிறது: அதேபோல இந்த சம்பவத்திலும் துப்பாக்கி குண்டு வெளியேறியுள்ளது. இதற்கு பின்னணியில் காரணம் ஏதேனும் உள்ளதா? தற்செயலாக நடந்ததா? என்பது விசாரணையில் தெரியவரும்.