அக்டோபர் 22 , புதுடெல்லி (New Delhi): இந்தியாவின் தலைநகரான டெல்லியை சுற்றிலும் ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்கள் அமைந்துள்ளன. இம்மாநிலங்களில் பிரதானமாக கரும்பு, கோதுமை போன்ற பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. அறுவடை முடிந்ததும் விவசாய கழிவுகளை அந்நிலத்திலேயே தீ வைத்து கொளுத்தும் பழக்கம் அங்குள்ள விவசாயிகளிடமும் இருந்து வருகிறது.
இதனால் காற்றில் கலக்கும் புகையானது, டெல்லியை சூழ்ந்து அங்குள்ள மக்களை காற்று மாசுபாடால் வாட்டி வதைத்து வருகிறது. இந்தியாவின் தலைநகரமாக இருக்கும் டெல்லியில் வாகன போக்குவரத்து மற்றும் கட்டுமான பணிகள் போன்றவை காரணமாக ஏற்கனவே காற்றின் தனமானது மோசமாக இருக்கும். அதேபோல, குளிர்காலத்தில் இயற்கையாகவே கடுமையான பனிப்பொழிவு அங்கு இருக்கும்.
இதற்கிடையில், சனிக்கிழமையான நேற்று மற்றும் இன்று காற்று மாசு அதிகளவு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. காற்று தரக்கட்டுப்பாடு சோதனையில் (Air Quality Index AQI) எனப்படும் அளவுகோளின்படி, டெல்லியின் காற்று மாசு இன்று 300 புள்ளிகளைக் கடந்து இருக்கிறது. அதேபோல, சர்வதேச விமான நிலையத்தில் 313 புள்ளியும், நொய்டாவில் 212 புள்ளியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. India Helps To Palestine: 6.5 டன் மருத்துவ பொருட்கள், 32 டன் மீட்புப்படை உபகரணங்களை பாலஸ்தீனியத்திற்கு அனுப்பியது இந்தியா.!
நகரின் பிரதான பகுதியான புதுடெல்லி பல்கலை.,யில் 330 புள்ளிகளும், துவாகர் பகுதியில் 313 புள்ளிகளும் இடம் பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமையை காட்டிலும், வார இறுதியான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் அதிக அளவு காற்று மாசு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல காற்று மாசை பொறுத்தவரையில் 0 முதல் 50 விழுக்காடு நல்ல காற்றாகவும், 51 முதல் 100 லேசான மாசுபாடு கொண்ட காற்றாகவும், 101 முதல் 200 நடுத்தர மாசுபாடு கொண்ட காற்றாகவும், 201 முதல் 300 மற்றும் 300-க்கும் மேற்பட்டது தரம் மோசமாக, மிகவும் மோசமான நிலை கொண்ட காற்றாகவும் பிரிக்கப்படுகிறது.