ஜூன் 24, லக்னோ (Lucknow): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ நகரில் வசித்து வருபவர் முகம்மது ரிஷ்வான் (வயது 30). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 29 வயது பெண்மணிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், ஹாசன்கன்ச் பகுதியில் தனியே வாடகைக்கு வீடு எடுத்து லிவிங் டுகெதர் முறையில் திருமணம் செய்யாமல் குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.
இவர்களில் 29 வயது இளம்பெண் இந்து மதத்தை பின்பற்றும் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் தாயிடையே தெரியவந்து, அவர் முகம்மதுவுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புகார் தொடர்பான விசாரணை அம்மாநில அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று அம்மனு மீதான இறுதி விசாரணை மற்றும் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், விசாரணையின் முடிவில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிபதிகள் சங்கீத சந்திரா, நரேந்திர குமார் ஜோஹ்ரி ஆகியோர் அடங்கிய அமர்வில் தீர்ப்பு வாசிக்கப்பட்டன. தீர்ப்பில் நீதிபதிகள் தரப்பில் தெரிவித்ததாவது, "மனுதாரரான லிவிங் டுகெதர் காதல் ஜோடி இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களின் உறவில் எவ்வித குழப்பமும் இருப்பதாக கூறவில்லை.
ஆனால், மனுதாரரின் தாயார் அளித்த புகாரின் விசாரணையில், இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவது மட்டுமே உறுதிப்படுத்தப்படுகிறது. இஸ்லாமிய மார்கத்தில் திருமணத்திற்கு முந்தைய தம்பதிகளுக்கு இடையேயான உடலுறவு குற்றமாக கருதப்படுகிறது. அதன்பால் திருமணத்திற்கு முன்பு ஆணோ, பெண்ணோ பாலியல் ரீதியான நடவடிக்கை மற்றும் முத்தமிடுதல், தொடுதல் போன்ற பாதக செயலில் ஈடுபட்டால் குர்ஆனின் விதிமுறைப்படி ஜின்னாவுக்கு வழிவகை செய்து ஆணுக்கும்-பெண்ணுக்கும் நூறு கசையடி, கல்லெறிந்து கொள்ளும் தண்டனை போன்றவை வழங்கப்படும் என கூறப்பட்டு இருக்கும். HC on Husband-Wife and Another Lady: வேறொரு பெண்ணோடு உறவுவைத்து மனைவியை தன்னுடன் வசிக்க கணவன் வற்புறுத்த முடியாது – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
இஸ்லாமிய சட்டத்தில் திருமணத்திற்கு வெளியே பாலின அங்கீகாரம் என்பது வழங்க இயலாதது ஆகும். மேற்படி விவகாரத்தில் இருவரும் மதம் மாறாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்கிறார்கள். தம்பதிகளுக்கு அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர் தரப்பில் இருந்து வாழ்க்கைக்கான சவால்கள் விடுக்கப்படும் பட்சத்தில், அதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை நடலாம். லிவிங் டுகெதர் உறவுகள் குறித்து உச்சநீதிமன்றம் கருத்துக்கள் வெளிப்படுத்தி இருந்தாலும், அவ்வாறான உறவுகளை உச்சநீதிமன்றம் ஊக்குவிப்பதாக கருதவும் இயலாது. சட்டத்தின்பால் அனைவரும் உண்மையான சரியான நீதி என்பதே அதற்கானதாகும்.
திருமணம் செய்தவர்களை பாதுகாக்க பல சட்டங்கள் இருக்கின்றது. உரிமைகள் மற்றும் சலுகைகள் கொண்டுள்ளன. மனைவி என்ற வார்த்தையின் மூலமாக உரிமை கோரல் பெறுவதற்கு லிவிங் டுகெதர் முறையில் இருப்போருக்கு உரிமை இல்லை என்பதை உரிமைகோரல் விவகாரத்தில் லிவிங் டுகெதர் துணையை சேர்க்க உச்சநீதிமன்றம் மறுத்தது உறுதிசெய்கிறது.
லிவிங் டுகெதர் முறையில் உருவாகும் உணர்ச்சி, சமூக பிரச்சனை, அதன் சட்ட சிக்கல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியமும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இவ்வாறான விஷயங்கள் உணர்ச்சி ரீதியாக மட்டுமின்றி சொத்து, வன்முறை போன்ற விஷயங்களையும் அடக்கி இருக்கிறது. அதேபோல, ஒரு துணை எதோ காரணத்தில் உயிரிழந்துவிடும் பட்சத்தில், அவர்களின் குழந்தைக்கான அங்கீகாரம், உரிமைகோரல் பிரச்சனையும் இருக்கிறது. இவ்வழக்கில் ரிட் மனு தாக்கல் செய்யப்படுகிறது. ரிட் அதிகார வரம்பு என்பது அசாதாரணமானது. அது இருதரப்பு தனியார் நபர்களுக்கு இடையேயான சர்ச்சையை தீர்க்க உருவாக்கப்படவில்லை..
இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. லிவிங் டுகெதர் தம்பதிகளுக்கு அவர்களின் உறவினர்கள் மூலமாக வாழ இயலாத நிலை அல்லது உயிருக்கு ஆபத்து வரக்கூடும் அல்லது அவை நடக்க வாய்ப்புள்ளது என்ற விஷயம் உறுதியாகும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து மனு விசாரணையை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரலாம்" என தெரிவித்துள்ளனர்.