Himachal Pradesh High Court, Shimla | Couple Husband & Wife (Photo Credit: Wikipedia / Pixabay)

ஜூன் 24, சிம்லா (Shimla): ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிம்லாவை சேர்ந்தவர் நைன் ஸுக். இவரின் மனைவி சீமா தேவி. தம்பதிகளுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.

விவாகரத்து பெறாமலேயே இருவரும் தனித்தனியாக வசித்து வந்த நிலையில், 5 ஆண்டுகள் கழித்து மனைவியை பார்க்க வந்தவர் குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது, அவர் வேறொரு திருமணம் செய்து குழந்தைகளை பெற்றெடுத்து, அந்த பெண்ணுடன் வீட்டிற்கு வந்துள்ளார்.

அங்கு தனது முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவியை சேர்ந்து வாழ வேண்டும் என பிரச்சனை செய்ய, இதில் துளியும் விருப்பம் இல்லாத பெண்மணி கணவரை பிரிந்து சென்றார். 2 மனைவிகளுடன் வாழ ஆசைப்பட்ட கணவர், மனைவி தன்னை பல கொடுமைக்கு உள்ளாக்கினார். Sundar Pichai: டிஜிட்டல் இந்தியாவுக்காக 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு – பிரதமரை சந்தித்தபின் சுந்தர் பிச்சை அறிவிப்பு.! 

அதனால் அவரை பிரிந்து சிலகாலம் வாழ்ந்தேன். தற்போது மீண்டும் அவருடன் வாழ ஆசைப்படுகிறேன். அவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என பல குற்றசாட்டுகளை முன்வைத்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றத்தில் முதல் மனைவி தனது கணவரின் இரண்டாவது திருமணம் குறித்து எடுத்துரைத்ததை தொடர்ந்து, அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் நைன் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நிறைவு பெற்று, இன்று நீதிபதி சத்யன் வைத்யா (Justice Satyen Vaidya) அமர்வில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அப்போது, நீதிபதி "கணவர் வேறொரு பெண்ணுடன் வாழும்போது அல்லது நட்பில் இருக்கும்போது, அவரின் மனைவியை இருவரும் சேர்ந்து வாழ வற்புறுத்த இயலாது" என தெரிவித்தார்.

மேலும், கணவரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்விவகாரத்தில் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு, கணவரான மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.