Earthquake (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 17, டெல்லி (Delhi News): தலைநகர் டெல்லியில், என்.சி.ஆர்-யின் சில பகுதிகளில் இன்று (பிப்ரவரி 17) அதிகாலை லேசான நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டது. பூமியின் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் இன்று அதிகாலை சரியாக 5.36 மணிக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகிவுள்ளது. டெல்லியில் கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. நூலிழையில் உயிர்தப்பிய ரைடர்கள்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.. வாகன ஓட்டிகளே அலட்சியம் வேண்டாம்.!

புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கை:

கடந்த ஜனவரி 23ஆம் தேதி அன்று, சீனாவின் ஜின்ஜியாங்கில் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு டெல்லி-என்சிஆர் முழுவதும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன்பின், மீண்டும் 3 வாரங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் வரும் நாட்களில் பெரியளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

சிசிடிவி காட்சி இதோ: