RCB Victory Celebrations (Photo Credit: @azzharee X)

ஜூன் 04, பெங்களூரு (Karnataka News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) நேற்று (ஜூன் 03) நடைபெற்ற இறுதிப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 18 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஆர்சிபி கோப்பையை கைப்பற்றியது. இதனை ஆர்சிபி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். நேற்று இரவில் இருந்தே பெங்களூருவில் ஆர்சிபி ரசிகர்கள் பட்டாசு வெடித்து, நடனமாடி கொண்டாடி வந்தனர். இதனால், பெங்களூரு மாநகரமே ரசிகர்களின் கொண்டாட்டத்தால் களைக்கட்டியது. RCB Victory Parade: பெங்களூரு வந்த கிங் கோலி.. ஓடோடி சென்று வரவேற்ற துணை முதல்வர்.. கப் அடித்த கொண்டாட்டத்தில் கர்நாடக மக்கள்.!

ஆர்சிபி ரசிகர் உயிரிழப்பு:

இந்நிலையில், ஆர்சிபி அணியின் வெற்றியைக் கொண்டாட சிவமோகா நகரில் இளைஞர்கள் பைக்கில் பேரணி நடத்த முடிவு செய்தனர். அப்போது, இரண்டு பைக் நேருக்கு நேர் மோதியதில், வெங்கடேஷ் நகரை சேர்ந்த அபினந்தன் (வயது 21) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சில இடங்களில் விடிய விடிய ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி போக்குவரத்துக்கு இடையூறு கொடுத்ததால், காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனையடுத்து, ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாட (RCB Victory Celebrations) பெங்களூருவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்று மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் வெற்றி கொண்டாட்டம் நடத்தப்படவுள்ளது.

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம்: