Andhra Pradesh Kurnool Bus Fire Accident NH 44 (Photo Credit: @KP_Aashish X)

அக்டோபர் 24, கர்னூல் (Andhra Pradesh News): தெலுங்கானா மாநிலம் ஹைத்ராபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் (Hyderabad to Bangalore Omni Bus) நோக்கி, நேற்று இரவு தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டு பயணம் செய்தது. இந்த பேருந்து இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில், ஆந்திரப் பிரதேசம் மாநிலம் கர்னூல் (Kurnool Bus Fire Accident Today) மாவட்ட எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தது. அப்போது, சாலையின் குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்தின் அடிப்பகுதியில் விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம் சிக்கி தீ பரவி இருக்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், தீயும் மளமளவென பரவத்தொடங்கி இருக்கிறது. நள்ளிரவு நேரம் என்பதால் பல பயணிகளும் உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர். தீ பரவியது அறிந்த 12 பயணிகள் உடனடியாக ஜன்னலை உடைத்துக்கொண்டும், அவசர கால கதவு வழியும் கீழே குதித்து உயிர்தப்பி இருக்கின்றனர். Chennai News: அசந்து உறங்கிய தாய். மழைநீர் குட்டையில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை பலி.. மழைக்காலத்தில் பெற்றோர்களே கவனம்.! 

23 பேர் பலி., 11 பேர் உடல்கள் மீட்பு:

பேருந்தில் தீ பரவியதால் கதவையும் திறக்க முடியாமல் சுமார் 23 பயணிகள் உள்ளேயே சிக்கிக்கொண்டு உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுனர், கிளீனர் என 43 பேருடன் பேருந்து புறப்பட்ட நிலையில், இதுவரை 23 பேரின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கீழே குதித்து உயிர்தப்பி காயமடைந்த நபர்களும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த விபத்து குறித்து காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பேருந்து விபத்தில் சிக்கிய பதறவைக்கும் காணொளி (Andhra Pradesh Kurnool Bus Fire Accident Video):