SL Vs AUS 2nd ODI (Photo Credit: @OfficialSLC X)

பிப்ரவரி 14, கொழும்பு (Cricket News): இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி (Australia Cricket Team), இலங்கை கிரிக்கெட் அணி (Sri Lanka Cricket Team) ஒருநாள் போட்டிகள் கொண்ட 2 தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இலங்கை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்த நிலையில், இரண்டாவது (SL Vs AUS 2nd ODI 2025) ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று கொழும்புவில் உள்ள பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. இலங்கை அணியின் சார்பில் விளையாடியவர்களில் நிஷான் 70 பந்துகளில் 51 ரன்னும், குஷல் 115 பந்துகளில் 101 ரன்னும், சரித் 66 பந்துகளில் 78 ரன்னும், ஜனித் 21 பந்துகளில் 32 ரன்னும் அதிகபட்சமாக அடித்து இருந்தனர். இதனால் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. SL Vs AUS: 282 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை; ஆஸ்திரேலியாவை கதறவிடும் ஒருநாள் ஆட்டம்.! 

ஆஸி., அணி படுதோல்வி - இலங்கை திரில் வெற்றி:

மறுமுனையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள், தொடக்கத்தில் நின்று ஆடுவது போல தோன்றினாலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெற்றிவாய்ப்பை தவறவிட்டனர். அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மேத்தீவ் 8 பந்துகளில் 2 ரன்கள் அடித்தும், டார்விஸ் 18 பந்துகளில் 18 ரன்கள் அடித்தும் அவுட்டாகி வெளியேறினர். பின் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், ஜோஷ் ஜோடி நின்று ஆடினாலும், இருவரும் 29 மற்றும் 22 ரன்கள் எடுத்து வெளியேறினர். இதனால் 15 ஓவரிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணி, 24.2 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து, 107 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இதனால் இலங்கை கிரிக்கெட் அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இலங்கை - ஆஸ்திரேலியா இடையே நடந்த 2 ஒருநாள் தொடரில், 2-லும் வெற்றிபெற்று இலங்கை அணி வெற்றிவாகை சூடியது.

ஜோஸ் இங்கில்ஸ் விக்கெட் பறிபோனது:

ஆரோன் ஹெர்டி விக்கெட் அவுட்:

துணித்தின் அசத்தல் பந்துவீச்சு:

பென் டுவார் விக்கெட் காலி: