Nishan Madushka & Kusal Mendis (Photo Credit: @OfficialSLC X)

பிப்ரவரி 14, கொழும்பு (Cricket News): இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி (Australia Cricket Team), இலங்கை கிரிக்கெட் அணி (Sri Lanka Cricket Team) தற்போது ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இன்று நடைபெறும் இரண்டாவது (SL Vs AUS 2nd ODI 2025) ஒருநாள் கிரிக்கெட் தொடரில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. SL Vs AUS 2nd ODI 2025: இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி; இலங்கை அணி பேட்டிங்.! 

281 ரன்கள் குவித்த இலங்கை:

இலங்கை அணியின் சார்பில் விளையாடியவர்களில் நிஷான் 70 பந்துகளில் 51 ரன்னும், குஷல் 115 பந்துகளில் 101 ரன்னும், சரித் 66 பந்துகளில் 78 ரன்னும், ஜனித் 21 பந்துகளில் 32 ரன்னும் அதிகபட்சமாக அடித்து இருந்தனர். இதனால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழந்து 281 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் பென், ஆரோன், சியான், ஆடம் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர். ஆரோன் தான் வீசிய 9 ஓவர்களில் 60 ரன்கள் எதிரணி எடுக்க காரணமாக இருந்தார். 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

இலங்கை அணி பேட்டிங்கில் வெளுத்துவாங்கியது:

100 ரன்கள் எடுத்ததும் விக்கெட்டை பறிகொடுத்த மெண்டிஸ்: