Visuals from Video (Photo Credit: X)

நவம்பர் 29, புனே (Pune): மத்திய அரசின் இரயில்வேத்துறை சார்பில், தேசிய அளவில் உள்ள ஆன்மீக சுற்றுலாத்தலங்களான அயோத்தி, காசி, ப்ரயாக் மற்றும் கயா ஆகிய நகரங்களில் இருக்கும் கோவில்களை, மக்கள் நேரில் பார்க்கும் விதமாக இரயில் யாத்திரை பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பிரத்தியேக இரயில் சேவை இதற்காக வழங்கப்படுகிறது. சொகுசு பயணம் சுற்றுலா பயணிகளுக்கு 3 வேளை உணவு, தங்குமிட வசதியுடன் சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்படுவதால், பல மாநிலங்களை சேர்ந்த ஆன்மீக அன்பர்களும் இந்த சுற்றுலாவை விரும்புகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து புனே நோக்கி பயணம் செய்த பாரத் கவுரவ் யாத்திரையின் கீழ், இரயில் பயணம் செய்த பயணிகளில் 40 பேருக்கு வழங்கப்பட்ட உணவு காரணமாக உடல்நலக்கோளாறு ஏற்பட்டு அவதிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. DMK Supporter Arrested: அரசு வேலைவாங்கித்தருவதாக ரூ.12 இலட்சம் பணம்பெற்று மோசடி: கடையநல்லூரில் திமுக பிரமுகர் கைது.! 

உடனடியாக புனே இரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படவே, அதிகாரிகள் முன்னதாகவே அங்கு மருத்துவ குழுவினரை வரவழைத்தனர். இரயில் புனே சென்றடைந்ததும் உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது. 40 பயணிகள் புனேயில் உள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர்.

நேற்று இரவு உணவு சாப்பிட்ட பயணிகளுக்கு உடல் உபாதை ஏற்பட்ட நிலையில், நள்ளிரவில் இரயில் புனே சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இரயில் நிலையத்தில் புறப்படுவதற்கு தயாராக இருந்த இரயில் ஒன்றில், எலிகள் ருசிபார்த்த சம்பவம் நடந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.