அக்டோபர் 09, பீகார் (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்நகர், ஃபகுலி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்திய விபத்தில் முதியவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 3 காவலர்கள், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல், பாலத்தின் கீழ் இருந்த கால்வாயில் உடலை தூக்கி வீசினர்.
இந்த நிகழ்வு குறித்த பதைபதைப்பு காட்சிகள், அங்கு சாலையோரம் இருந்தவரால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் பதிவிடப்பட்டது. இதனையடுத்து, வீடியோ முசாபர்நகர் காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு சென்றுள்ளது. Rain Status Tamilnadu: காலை 10 மணிவரை சென்னை, நெல்லை உட்பட 10 மாவட்டங்களில் மழை – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
இதனையடுத்து, துறை ரீதியான விசாரணை மேற்கொண்ட சஞ்சீவ் சுமன், காவலர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்தார். 2 ஒப்பந்த பாதுகாப்பு பணியாளர்களின் உரிமத்தை இரத்து செய்து உத்தரவிட்டார்.
கால்வாயில் வீசப்பட்ட முதியவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த மேற்படி விசாரணையும் நடந்து வருகிறது.
बिहार पुलिस की शर्मनाक करतूत, सड़क दुर्घटना में मृत शख्स के शव को उठाकर नहर में फेंका.
📍फकुली, मुजफ्फरपुर pic.twitter.com/fE7CRMYo3R
— Utkarsh Singh (@UtkarshSingh_) October 8, 2023