ஏப்ரல் 07, வாரணாசி (Uttar Pradesh News): பாஜக தேசிய தலைவராக பணியாற்றி வரும் ஜேபி நட்டா, தெற்கு டெல்லியில் உள்ள தனது வீட்டில் மனைவி & குடும்பத்தினருடன் தங்கி இருக்கிறார். இவரின் மனைவி மல்லிகா நட்டா பெயரில், டொயாட்டோ பார்ச்சுனர் கார் உள்ளது. கடந்த மார்ச் மாதம் மல்லிகா நட்டாவின் பெயரில் (Mallika Nadda SUV Stolen) உள்ள காரை, ஓட்டுநர் ஜோகிந்தர் கோவிந்தபுரியில் இருக்கும் டொயோட்டா பார்ச்சுனர் சர்விஸ் சென்டருக்கு எடுத்துச் சென்றார்.
மாயமான கார் குறித்து தீவிர விசாரணை: பின் மீண்டும் அவர் காரை சர்விஸ் சென்டரில் இருந்து எடுக்கச்சென்றபோது, கார் மாயமானது உறுதியானது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கார் சிசிடிவி கேமிரா காட்சிகளின்படி குருகிராம் நோக்கி பயணம் செய்தது உறுதியானது. இறுதிவரை கார் தொடர்பான தகவல் தெரியாமல் இருந்தது. Indian 2 Release Update: "சேனாபதியின் மறுபிரவேசம்" தயாராகுங்கள் ரசிகர்களே: இந்தியன்-2 அப்டேட் வெளியிட்ட கமல் ஹாசன்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
கார் மீட்பு & இருவர் கைது: இந்நிலையில், பாஜக தேசிய தலைவரின் மனைவி கார் திருடப்பட்ட விவகாரத்தில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து திருடப்பட்ட கார் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கைதான இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில், கார் ஒன்றை திருடி நாகலாந்து வரை செல்ல இருவரும் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.