ஏப்ரல் 07, சென்னை (Cinema News): இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி, கடந்த 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன் (Indian 1996 Movie). இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் (Kamal Hassan), மனிஷா கொரியாளா, நாசர், மனோரமா, செந்தில், கவுண்டமணி, கஸ்தூரி, நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்திருந்தனர். ஊழலை எதிர்க்கும் சுதந்திர போராட்ட தியாகியின் வேடம் மற்றும் ஊழலில் குடிகொண்டு இருக்கும் போக்குவரத்து துறை அதிகாரி என தந்தை-மகன் கதாபாத்திரத்தில், இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்த கமல் ஹாசனின் நடிப்பு இன்று வரை ரசிகர்களால் விரும்பப்படுகிறது.

இந்தியன் 2 திரைப்படம்: நீண்ட இடைவெளிக்கு பின்னர் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வெளியீடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இரண்டாவது பாகம் தற்போது ஷங்கர் - கமல் கூட்டணியில் மீண்டும் உருவாகி இருக்கிறது. இந்தியன் 2 படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், விவேக், காளிதாஸ் ஜெயராம், பாபி சிம்ஹா, மனோபாலா உட்பட பலரும் நடித்து இருக்கின்றனர். Father In Law Killed by Accident: ஜமீன் பரம்பரையை ஓசிசோறு என அசிங்கப்படுத்திய மாமனார்; லாரியை விட்டு அடித்துத்தூக்கிய மருமகன்.. தூத்துக்குடியில் பகீர் கொலை.! 

ஜூனில் திரைக்கு வருகிறது: லைகா புரொடக்சன்ஸ் (Lyca Productions) தயாரிப்பில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில், ரூ.250 கோடி செலவில் படம் தயாராகி வருகிறது. உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படம், பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. மேலும், அமெரிக்காவில் ஹாலிவுட் படங்களை தயாரிக்க பயன்படுத்தும் தொழில்நுட்பங்களும் உபயோகம் செய்யப்பட்டு காட்சிகள் பிரம்மிக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், படம் ஜூன் மாதம் வெளியாகுவதை நடிகர் கமல் ஹாசன் உறுதி செய்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பு அவரின் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.