Suresh Gopi (Photo Credit: @NewsArenaIndia X)

ஜூன் 04, திருச்சூர் (Andhra Pradesh News): ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய இந்தியா தேர்தல்கள் 2024 , ஏழுகட்டமாக நடைபெற்று முடிந்து இன்று முடிவுகள் வெளியாகி வருகிறது. காலை 12 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 298 தொகுதியிலும், காங்கிரஸ் கூட்டணி 226 தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.

கேரளாவில் முதல் வெற்றியை அடைந்த பாஜக: இந்நிலையில், கேரளாவில் கடந்த சில ஆன்டுகளாகவே தொடர் மக்கள் பணிகளில் ஈடுபட்டு வந்த பாஜக கட்சி, தற்போது தனது முதல் வெற்றியை உறுதி செய்துள்ளது. கேரளாவில் உள்ள திருச்சூர் தொகுதியில் இருந்து பாஜக வேட்பாளராக நடிகர் சுரேஷ் கோபி களமிறங்கி இருந்த நிலையில், அவர் வெற்றியை உறுதி செய்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுனில் குமாரை, சுரேஷ் கோபி 73 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி அடைந்துள்ளார். Microsoft Layoff: 100 க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்தது மைக்ரோசாப்ட்; விபரம் உள்ளே..! 

அதேபோல, திருவனந்தபுரம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ள மத்திய அமைச்சர் ராஜீவ், தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர், 4 ஆயிரம் வாக்குகள் பின்னடைவில் இருக்கிறார். தென் மாநிலங்களில் கர்நாடக மாநிலத்தை தவிர்த்து, பிற மாநிலங்களில் தொடர்ந்து தன்னை முன்னிலைப்படுத்தி வந்த பாஜக, கேரளாவில் தனது முதல் வெற்றியை உறுதி செய்துள்ளது.