ஜூலை 17, பஞ்சாப் (Punjab News): பஞ்சாப் மாநிலம் சண்டிகர், கர்னல் பகுதியில் 17 வயதுடைய பார்வை மாற்றுத்திறன் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி வசித்து வருகிறார். சிறுமி தனது பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த மர்மநபர் சிறுமியை காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
சிறுமியின் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் :
பின் சிறுமிக்கு விளையாட களிமண் பொருட்கள் கொடுத்து மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். வீட்டுக்கு வந்த தாய் தனது மகளின் நிலையை கண்டு சந்தேகமடைந்து சோதித்த போது அவர் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. அப்போது கயவர்கள் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி இருக்கின்றனர். இதனால் பயந்துபோன பெண்மணி என்ன செய்வது என தெரியாமல் இருந்துள்ளார். பூட்டியிருந்த வீட்டில் மனித எலும்புக்கூடு.. அதிர்ச்சி சம்பவம்..!
கர்ப்பமான சிறுமி :
இதனிடையே பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கர்ப்பமாகி இருக்கிறார். இதனால் அவரது வயிறும் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டு வந்த நிலையில், பதறிப்போன தாய் மகளை வெளியூருக்கு அழைத்துச் சென்று விட்டு விட்டதாக தெரிய வருகிறது. சிறுமியை மீட்ட காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதன் பேரில் சிறுமியின் தாய் கண்டறியப்பட்டுள்ளார்.
போலீசார் விசாரணை :
அவரிடம் நடத்திய விசாரணையில் தகவல் தெரியவரவே, சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் பாதுகாப்பாக அரசு முகாமில் தங்க வைத்துள்ளனர். தற்போது குற்றவாளிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து அவரை கண்டறியும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3