15வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
உத்தர பிரதேசத்தில் திருமணமான பெண் ஒருவர் 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை (Woman Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 17, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மதுராவின் பிருந்தாவனில் 15வது மாடியில் இருந்து குதித்து திருமணமான பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். தனது குடும்பத்தினரின் சம்மதம் இல்லாமல் நிதி உபாத்யாய் என்ற பெண் தனது காதலன் சைலேந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் பிருந்தாவனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 15வது மாடியில் வசித்து வந்தனர். Income Tax Returns Filing: வருமான வரி பதிவு தாக்கல் தேதி நீட்டிப்பு.. வருமான வரித்துறை அதிரடி உத்தரவு.!
பெண் தற்கொலை:
இந்நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல, குடும்பத் தகராறில் விரக்தியடைந்த நிதி உபாத்யாய் 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை (Suicide) செய்துகொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து, தடயவியல் குழுவும் விசாரணைக்கு வந்தனர். அப்போது, தற்கொலைக் குறிப்பை கண்டுபிடித்தனர். அதில், 'வலி' என குறிப்பிட்டிருந்தது. இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.
(The above story first appeared on LatestLY on Sep 17, 2025 03:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

