Harshavardhan (Photo Credit: @TeluguScribe X)

மே 31, தெலுங்கானா (Telangana News): தெலுங்கானாவில் உள்ள மகபூபாபாத் மாவட்டத்திலுள்ள கங்காரம் மண்டலம், சிந்தகுடேம் கிராமத்தைச் சேர்ந்த காந்த ராவின் இளைய மகன் ஹர்ஷவர்தன் (Harshavardhan) ஆவார். இவருக்கு வயது 9. இவர் விடுதியில் தங்கி பள்ளி படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில் கோடை விடுமுறைக்காக வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சிறுவனுக்கு பிடிக்காத ஸ்டைலில் தந்தை முடி வெட்டி விட்டுள்ளார். இதனால் கடுப்பான ஹர்ஷவர்தன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை (Suicide) செய்து கொண்டார். தொடர்ந்து அவரின் பெற்றோர் அவரை ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுவன் ஐந்து நாட்களாக மரணத்துடன் போராடிய நிலையில், நேற்று உயிரிழந்தான். Omni Bus Accident: ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 10 பேருக்கு காயம்..!

தற்போது தற்கொலை செய்துக்கொள்ளும் வயதில் குழந்தைகள், (டீன்ஏஜ்) பதின்மவயதில் இருப்பவர்களே அதிகம். ஒரு மனிதனுக்கு மனதில் ஏற்படும் விரக்தி, பயம், மனச்சோர்வு, கவலை எல்லாம் சேர்ந்து அவனை அழுத்தும் போது அவன் தற்கொலை செய்ய முயற்சிக்கிறான். இப்படிப்பட்ட மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும். மேலும் இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019 (13 மொழிகளில் சேவைகள் கிடைக்கின்றன)

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் – 080 – 26995000