
மே 22, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பெங்களூருவில் (Bengaluru) புறநகர் பகுதிகளில் உள்ள சந்தபுரா ரயில்வே பாலம் அருகே சந்தேகத்திற்கு உள்ளான சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சூட்கேசை சோதனை செய்து பார்த்தபோது, அதில், ஒரு சிறுமி சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 16 Year Old Girl Dies: செல்பி ஆசையால் விபரீதம்.. 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுமி பரிதாப பலி.!
சூட்கேசில் சிறுமியின் சடலம்:
இதுகுறித்த விசாரணையில், சிறுமி வேறு ஒரு இடத்தில் கொலை (Murder) செய்யப்பட்டிருக்கலாம் எனவும், அவரது உடல் சூட்கேசில் அடைக்கப்பட்டு, ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டிருக்கலாம் எனவும், காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து, சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சூட்கேசில் வேறு ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத நிலையில், சிறுமி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.