ஜூன் 12, புதுடெல்லி (New Delhi): இந்திய இராணுவத்தின் தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே பணியாற்றி வந்தார். இவரின் பதவிக்காலம் ஜூன் மாதம் 30ம் தேதியுடன் நிறைவுபெறவுள்ளது. அன்றைய நாளில் அவர் இராணுவ தலைமை தளபதி பொறுப்பில் இருந்து நேரடி ஓய்வுபெறுகிறார். இதனால் அடுத்த தலைமை தளபதி யார்? என்ற கேள்வி எழுந்தது. DA Hike for Bank Employees: 8 இலட்சம் வங்கி ஊழியர்களுக்கு தித்திப்பு செய்தி; ஊதிய உயர்வு அறிவிப்பு.!
இராணுவ துணை தலைவர் இனி தளபதி:
இந்நிலையில், இராணுவத்தின் தளபதியாக மனோஜ் பாண்டே ஓய்வுபெற்ற அதேநாளில், பிற்பகலில் இருந்து இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி (Lt. General Upendra Dwivedi) பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே இராணுவத்தின் துணை தலைவராக பணியாற்றி வரும் நிலையில், தளபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 30ம் தேதி மனோஜ் பாண்டே பணி நிறைவு செய்ததும், அதே சமயத்தில் உபேந்திர திவேதி இராணுவ தளபதியாக பொறுப்பேற்று பணியாற்றவிருக்கிறார்.