ஜூன் 11, புதுடெல்லி (New Delhi): வங்கி ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மே, ஜூன், ஜூலை மாதங்களில் 15.97% உயர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பேரில், வங்கி ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டு அறிவிப்பட்டுள்ளது. மார்ச் 2024ம் ஆண்டு பின் நிறைவடைந்த சராசரி காலாண்டில் 0.24 புள்ளிகள் அதிகரித்துள்ளன. தற்போது வங்கி ஊழியர்கள் சங்கம் 17% வருட ஊதிய உயர்வுக்கு ஒப்புக்கொண்டுள்ள காரணத்தால், பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.8,284 கோடி செலவு ஆகும். இதனால் 8 இலட்சம் வங்கி ஊழியர்கள் பலன் அடையவுள்ளனர். Kalki 2898 AD Trailer: பாகுபலி பிரபாஸுடன் இணைந்த ஆண்டவரின் கல்கி.. பட்டைய கிளப்பும் ட்ரைலர்..!
புதிய ஊதிய உத்தரவின்படி, ரூ.48,480 முதல் ரூ.1,73,860 வரை ருக்கலாம் என தெரியவந்துள்ளது. பிரிவு 1 முதல் 7 வரை உள்ள அனைத்து வகை பணியாளர்களுக்கும் இவை பொருந்தும். அதேபோல, வங்கி ஊழியர்கள் பல ஆண்டுகளாக ஐந்து நாட்களுக்கான வேலைகளை கூறிவரும் நிலையில், அரசின் ஒப்புதலுக்காக இக்கோரிக்கைகள் காத்திருக்கின்றன.