Central Minister Anurag Thakur (Photo Credit: @AnuragThakur X)

ஆகஸ்ட் 25, இமாச்சல பிரதேசம் (Himachal Pradesh News): கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி சந்திராயன் 3 விண்கலம் நிலவிற்க்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டது. இதனை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பிக்க தேசிய விண்வெளி தினமானது ஆகஸ்ட் 23-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தேசிய விண்வெளி தினம் என்பதால் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதள பக்கத்தில், இந்திய நாட்டின் விண்வெளி துறையையும், விண்வெளி துறையில் பணியாற்றுபவர்களையும் பாராட்டி வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இதனிடையே இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறி இருக்கும் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதன்படி மாணவர்களிடம் பேசியவர், 'விண்வெளிக்கு முதலில் சென்றவர் யார்?' என்ற கேள்வியினை எழுப்பினார். இந்தக் கேள்விக்கு மாணவர்கள் அனைவரும் இணைந்து 'நீல் ஆம்ஸ்ட்ராங்' என்ற பதில் கூறியுள்ளனர். Tractor Accident: டிராக்டர் மீது கண்டைனர் மோதி பயங்கர விபத்து.. 8 பேர் பலி., 43 பேர் படுகாயம்.! 

மத்திய அமைச்சர் கேள்வி:

ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாத முன்னாள் மத்திய அமைச்சர், 'ஹனுமனாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்' என மாணவர்களிடம் கூறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் பேசுகையில், "விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமனாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். நமது பாரம்பரியம், அறிவு, கலாச்சாரம் உள்ளிட்டவை எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் உணர வேண்டும். ஆங்கிலேயர்கள் கற்றுத் தந்தவற்றையே நாம் பயில்கிறோம். அதற்குள்ளே சிக்கிக் கொண்டுள்ளோம். நம்மை சுற்றி பல விஷயங்கள் உள்ளன. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள். நம் தேசம், நம் பாரம்பரியம், நம் அறிவு ஆகியவற்றை சிந்தியுங்கள். பாடநூல்களுக்கு வெளியே நிறைய உள்ளது. பாடநூல்களுக்கு வெளியே உள்ளவற்றை வெவ்வேறு கோணங்களில் பார்த்தால் நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.

அறிவியல்பூர்வமாக விண்வெளிக்கு முதலில் சென்றது யார்?

முன்னாள் மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கள் தற்போது விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், பலரும் மாணவர்கள் கூறிய பதிலுக்கு பதில் அளிக்காமல் சங்ககால புராணத்தை அமைச்சர் வரலாறாக கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து இணையத்தில் நெட்டிசன்கள் வெளியிட்ட பதிவில், "பள்ளி மாணவர்களே தவறான தகவலை தான் கூறியிருக்கின்றனர். அதனை எடுத்துரைக்காமல் புராணத்தை கூறுவது மாணவர்களின் சந்தேகத்தை அதிகப்படுத்துமே தவிர, அதனை உறுதி செய்யாது. விண்வெளிக்கு முதலில் சென்ற மனிதர் சோவியத்தின் யூரி காகரின். இவர் கடந்த 1961-ஆம் ஆண்டு விண்வெளிக்கு சென்று பூமியை சுற்றினார். மாணவர்களின் கூற்றுப்படி பார்த்தால் 1969-ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் விண்வெளிக்கு சென்று முதலில் நிலவில் நடந்த மனிதராகவே கருதப்படுகிறார். இந்த தவறை சுட்டிக்காட்டாமல் வரலாறை கூறி மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்" என தெரிவித்துள்ளனர்.

விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் என மத்திய அமைச்சர் பேச்சு: