![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/11/Voting-Photo-Credit-@ANI-X-380x214.jpg)
நவம்பர் 07, சென்னை (Chennai): சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் (Mizoram & Chhattisgarh Assembly Poll) மாநிலங்களுக்குக்கான சட்டப்பேரவை தேர்தல், இன்று காலை 07 மணி முதலாக தொடங்கி நடைபெறுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டமாக நடைபெறும் தேர்தலில், இன்று முதற்கட்டமாக 90 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
கிட்டத்தட்ட 40 இலட்சம் வாக்காளர்கள் இன்று தங்களின் ஜனநாயக கடமைகளை ஆற்றவுள்ளார். வாக்காளர்களின் வசதிக்காக 5,304 இடங்களில் வாக்குப்பதிவு மையங்கள் அம்மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, மிசோரம் மாநிலத்தில் ஒரேகட்டமாக நடைபெறும் தேர்தல், 8 இலட்சம் வாக்காளர்கள் இன்று ஒரேநாளில் வாக்களிக்கின்றனர். முதல் முறையாக 50 ஆயிரம் பேர் வாக்குச்செலுத்த காத்திருக்கின்றனர்.
அங்குள்ள 40 தொகுதிகளில் 170 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். பதற்றத்திற்குரிய வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. Dindigul Shocker: மின்வாரிய அலட்சிய பணியாளர்களால் அக்கா-தம்பி பரிதாப பலி.. வீட்டில் மின்சாரம் கசிந்து சோகம்.!
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருப்பதால், அங்குள்ள பல வாக்குச்சாவடி மையங்களில் துணைஇராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா, தொண்டமார்கா பகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த, கோப்ரா பட்டாலியனை சேர்ந்த சிஆர்பிஎப் ஜவான் ஐஇடி (CRPF Jawan IED Bomb Blast) குண்டுவெடிபுள் சிக்கி காயம் அடைந்துள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வேறு எங்கேனும் கண்ணிவெடிகள் அல்லது குண்டு வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடந்து வருகிறது.