![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/11/Electric-Shock-Vedasandur-Photo-Credit-Pixabay-Facebook-380x214.jpg)
நவம்பர் 06, வேடசந்தூர் (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், வடமதுரை, மும்மாரி கிராமத்தை சேர்த்தவர் சுந்தரன். இவரின் மனைவி நல்லம்மாள். தம்பதிகளுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் இருக்கின்றனர். வறுமையின் பிடியில் தவித்து வரும் இவர்கள், கூரை வேயப்பட்ட வீட்டில் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த ஒருவாரமாகவே அப்பகுதியில் கனமழை பெய்து வந்துள்ளது. இதனால் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதாக தெரியவரும் நிலையில், மின்வாரிய ஊழியர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேரில் வந்தும் பார்க்கவில்லை.
கடந்த ஒருவார காலமாக உயிரை கையில் பிடித்து குடும்பத்தினர் இருந்த நிலையில், நேற்று பெற்றோர் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது மீண்டும் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 Apps Banned From India: சூதாட்டம் உட்பட 15 ஆன்லைன் மோசடி செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு; அமலாக்கத்துறை பரிந்துரையை ஏற்று அதிரடி.!
அவர்கள் மெயின் கரண்டை மட்டும் ஆப் செய்துவைக்க சொல்லியுள்ளனர். அதன்படி, மெயின் ஆப் செய்யப்பட்ட நிலையில், அதனைத்தாண்டியும் மின்சாரம் கசிந்துள்ளது. இது தெரியாமல் சிறுவன் குமார் வீட்டிற்குள் சென்றபோது, மின்சாரம் தாக்கி தூக்கி வீடப்பட்டார்.
தம்பியின் அபயக்குரல் கேட்டு உள்ளே சென்ற அக்காவான சிறுமியும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இந்த சம்பவத்தில் இருவரும் நிகழ்விடத்திலேயே பலியாகிவிட, தங்களின் குழந்தைகள் மின்வாரிய துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிரிழந்துவிட்டதாக பெற்றோர் கண்ணீருடன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.