மே 06, புதுடெல்லி (New Delhi): இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான (Council for the Indian School Certificate Examinations) கவுன்சில் சங்கம் சார்பில் நடத்தப்படும் சிஐஎஸ்சிஇ தேர்வுகள், தனியார் சார்பில் நடத்தப்படும் மிகப்பெரிய தேர்வுகளில் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஐசிஎஸ்சி 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 28 ம் தேதி தொடங்கி நடைபெற்றது. 12ம் வகுப்புக்கான தேர்வுகள் ஏப்ரல் 3ல் தொடங்கி நடைபெற்றது. மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தன.

மதிப்பெண் தெரிந்துகொள்ளும் வழிமுறை: இந்நிலையில், இன்று மே 06ம் தேதி சிஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதிய 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் காலை 11 மணியளவில் வெளியாகிறது. இந்த தேர்வு முடிவுகளை cisce.org மற்றும் results.cisce.org ஆகிய இணையத்தள பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம். தேர்வர்கள் தங்களின் யுஐடி மற்றும் பதிவு எண் கொண்டு தங்களின் மதிப்பெண் விபரங்களை தெரிந்துகொள்ளலாம். Minor Boy Died: அந்தரங்க உறுப்பில் கிரிக்கெட் பந்து பட்டு 11 வயது சிறுவன் பரிதாப பலி; விளையாட்டு வினையான சோகம்.! 

கடந்த கால தேர்ச்சி விகிதம்: சிஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு தேர்வுகளை அகில இந்திய அளவில் 2.5 இலட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். டிசம்பர் 7, 2023 அன்று தேர்வு அட்டவணை வெளியாகி, மார்ச் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு தேர்வு முடிவுகள் மே மாதம் 14ம் தேதி வெளியானது. அந்த தேர்வில், தேர்வெழுதிய மாணவிகளில் 99.21 % பேரும், 98.71% பேரும் தேர்ச்சி அடைந்திருந்தனர். ஐஎஸ்சி தேர்வெழுதியவர்களில் மாணவிகள் 98.01% பேரும், மாணவர்களில் 95.56% பேரும் தேர்ச்சி அடைந்தனர்.

தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறையில் கீழ் நடந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 06,2024 காலை 09:30 மணியளவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுகுறித்த செய்தியை படிக்க இங்கு அழுத்தவும்.