
மார்ச் 08, ப்ளுர்காட் (West Bengal News): மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள தெற்கு தினஜ்புர் மாவட்டம், ப்ளுர்காட் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், அங்குள்ள கவுர் பங்கா பல்கலைக்கழகத்தில் மாணவியாக இருக்கிறார். இவர் தினமும் ரயில்களில் பயணம் செய்து கல்வி நிறுவனத்திற்கு சென்று, பின் மீண்டும் வீட்டுக்கு திரும்புவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று ப்ளுர்காட் பவுண்ட் பயணிகள் இரயிலில் மாணவி பயணம் செய்தார். அப்போது, இளம்பெண்ணுக்கு அருகிலேயே நடுத்தர வயதுடைய நபர் அமர்ந்து இருந்த நிலையில், சுமார் 30 நிமிடங்கள் அவர் பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். Trending Video: கழிவுகளை ஓடும் இரயிலில் இருந்து தூக்கி வீசிய இரயில்வே ஊழியர்.. வீடியோ லீக்கானதால் வேலைக்கு ஆப்பு.!
வீடியோ வைரல் & கைது நடவடிக்கை:
பெண்ணின் உடல் அங்கங்களை ஆபாசமான முறையில் அவர் படம்பிடித்த நிலையில், இதனை எதற்ச்சையாக கவனித்த பெண்மணி மர்ம ஆசாமியிடம் இருந்து செல்போனை பிடுங்கி பதிவு செய்த காணொளியை பார்த்தார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன பெண்மணி, ஆவேசத்தில் அந்த நபரை சரமாரியாக தாக்கினார். இந்த விஷயம் குறித்து இரயில் நிலைய அதிகாரிகளிடம் வாயமொழி தகவலையும் பெண்மணி தெரிவித்துள்ளார். இதனிடையே, பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்த ஆசாமியின் அதிர்ச்சி செயலும், பின் அவர் அடிவாங்கும் சம்பவமும் சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விஷயம் குறித்து தற்போது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்த ஆசாமி கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்ணை நபர் ஆபாச வீடியோ எடுத்த காணொளி மற்றும் உண்மை அறிந்து ஆசாமியை அடித்து வெளுத்த பெண்மணி:
#Kalesh overloaded pic.twitter.com/fBYCJNXvKP
— Emotional_Accused (@Emotional7979) March 7, 2025