Navy Helicopter Crash (Photo Credit: @Jayant_kumar_04 X)

செப்டம்பர் 03, சூரத் (Gujarat News): குஜராத் மாநிலம், போர்பந்தரில் (Porbandar) இருந்து கடலுக்குள் சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹரி லீலா கப்பலில் இருந்து, காயமடைந்தவர்களை மீட்க கடலோரக் காவல்படையில் ஹெலிகாப்டர் ஒன்று நேற்று (செப்டம்பர் 02) இரவு 11 மணியளவில் அனுப்பட்டது. அப்போது, ஏஎல்எச் ஹெலிகாப்டர் (Helicopter Crash) கட்டுப்பாட்டை இழந்து கடலில் அவசரமாக தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது. போர்பந்தர் அருகே கடலில் விழுந்த ஹெலிகாப்டரில் 4 பேர் சென்றதாக கடலோர காவல்படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். Foreign Woman Rape: யோகா மையத்தில் வெளிநாட்டு பெண் பாலியல் பலாத்காரம்.. பயிற்சியாளர் கைது..!

இதுகுறித்து தகவல் அறிந்த சென்ற மீட்பு படையினர் தீவிரமாக தேடி வந்தனர். கடலில் விழுந்த ஹெலிகாப்டரில் (ALH Helicopter) இருந்து ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக செயல்படுகிறது. காணாமல் போன 3 பேரையும் தேட 4 கப்பல்கள், 2 ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.