ஜனவரி 07, பெங்களூரு (Karnataka News): உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜைச் சேர்ந்தவர் அனுாப் குமார் (வயது 38). இவர், கர்நாடக மாநிலம், பெங்களூரில் (Bengaluru) தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ராக்கி (வயது 35). இத்தம்பதிக்கு அனுப்ரியா (வயது 5) என்ற மகளும், பிரியங்க் (வயது 2) என்ற மகனும் இருந்தனர். இவர்கள், கடந்த 2 ஆண்டுகளாக சதாசிவ நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சிறுமி அனுப்ரியா உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டார். குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேலைகளுக்கும் 2 வேலையாட்களை நியமித்திருந்தார். Girl Falls Into Borewell: 540 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளம்பெண்; மீட்பு பணி தீவிரம்..!
தம்பதி தற்கொலை:
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜனவரி 05) வீட்டு பணியாட்களிடம், 'நாங்கள் நாளை புதுச்சேரிக்கு செல்ல உள்ளோம். எனவே, காலை சீக்கிரமாக பணிக்கு வாருங்கள்' என, தம்பதி கூறியுள்ளனர். இதன்படி, நேற்று அதிகாலையே பணியாட்கள் வந்தனர். அப்போது, தாழிடப்படாத கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, அனுாப் குமாரும், அவரது மனைவியும் துாக்கில் (Hanging Suicide) தொங்கிய நிலையில் கிடந்தனர். வீட்டில் குழந்தைகளும் இறந்து கிடந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் முதற்கட்ட விசாரணையில், குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற (Murder) பின், தம்பதி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.