Girl Falls Into Borewell in Gujarat (Photo Credit: @mgvimal_12 X)

ஜனவரி 07, ஆமதாபாத் (Gujarat News): குஜராத் மாநிலம், கட்ச் (Kachchh) மாவட்டத்தில் உள்ள கந்தேரை கிராமத்தில் 540 அடி ஆழ ஆழ்துளை கிணறு (Bore Well) ஒன்று அமைந்துள்ளது. இந்த கிணற்றில், 18 வயது பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளார். அந்த பெண்ணை மீட்கும் பணியில் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டனர். அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். Nepal Earthquake: நேபாளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. இந்தியாவிலும் உணரப்பட்ட அதிர்வு.. பீதியில் சாலைக்கு ஓடி வந்த மக்கள்..!

மீட்பு பணிகள் தீவிரம்:

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படைக் குழுக்கள் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 490 அடி ஆழத்தில் சிக்கி உள்ள பெண்ணுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று (ஜனவரி 06) காலை 6.30 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த பெண்ணை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.