டிசம்பர், 8: டிசம்பர் மாதம் (December) ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கிய மாதம் என்று கூறலாம். ஏனெனில் அம்மாதம் கடந்த பின்னரே புதிய ஆண்டு என்பதில் நாம் அடியெடுத்து வைக்கிறோம். தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை உச்சம்பெற்று இருக்கும். அதே நேரம் பண்டிகைக்கும் பஞ்சம் இருக்காது.
பன்முகம் கொண்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் டிசம்பர் மாதத்தில் பல்வேறு திருவிழாக்கள் (December Festivals) நடைபெறுகின்றன. இவை உலகளவிலும், இந்திய அளவிலும் கவனிக்கப்பட்டு முக்கியத்துவம் பெறுகின்றன. இம்மாதத்தில் உலகளவில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையும் இடம்பெறுகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் டிசம்பர் மாதம் நடைபெறும் திருவிழாக்களின் பட்டியல் தொகுப்பு உங்களுக்காக வழங்கப்படுகிறது.
ரன் உத்சவ், கட்ச் (Rann Utsav-Kutch): ரன் உத்சவ் என்பது வெண்ணிற பாலைவனத்தில் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இந்த உற்சவத்தின் பொது சுற்றுலா பயணிகளுக்காக பாலைவனப்பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டு, உள்ளூர் கலாச்சாரம் மற்றும் உணவுகள் விருந்தளிக்கப்படும். இரவு நேரத்தில் வண்ணமயமான விளக்கில் நாட்டுப்புற இசை, நடனம், கைவினைப்பொருட்கள் ஷாப்பிங் என பாலைவனத்தின் அழகை நாம் அங்கு கண்டுகளிக்கலாம். இடம்: ரன் ஆப் கட்ச், குஜராத்.
காந்தப்புலங்கள், ராஜஸ்தான் (Magnetic Fields, Rajasthan): கோவா இசைத்திருவிழாவுக்கு பெயர்போனது. ஆனால், இராஜஸ்தான் மாநிலம் இந்திய திருவிழா காட்சிக்கு திறமை வாய்ந்தது ஆகும். கடத்த 17ம் நூற்றாண்டின் போது ராஜஸ்தான் கோட்டையில் நடந்த இசைவிழா உலகளவில் கவனத்தை பெற்றது. உலகப்புகழ்பெற்ற இசை கலைஞர்களை கொண்டு இசைத்திருவிழா நடைபெறும். அப்போது, காந்தப்புல திருவிழா நடைபெறும். இந்தியாவின் பண்டைய மற்றும் சமகால கலாச்சார கொண்டாட்டமாக இத்திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 9ம் தேதி முதல் டிச. 11ம் தேதி வரை, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஷெகாவதியில் திருவிழா நடைபெறும். தகவலுக்கு: www.magneticfields.in Online Game Audit: செல்போனுக்கு அடிமையாகும் சிறார்களுக்கு மூர்க்கத்தனமான குணம்.. அதிர்ச்சியை தரும் பகீர் தகவல்.. பெற்றோர்களே கவனியுங்கள்.!
ஹாட் ஏர் பலூன் திருவிழா, கர்நாடகா (Hot Air Balloon Festival,Karnataka): கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி, மைசூர், பீதர் பகுதியில் நடத்தப்படும் ஹாட் ஏர் பலூன் திருவிழா குளிர் நிறைந்த தெளிவான வானத்தில் பறக்கும் அழகை இங்கு கண்டுகளிக்கலாம். பறவைகளின் கூடாரமாக இயற்கையாக இருக்கும் வனத்திற்கு நடுவே சூரியனை கண்டபடி வானில் பறக்கவும், அந்த அழகை ரசிக்கவும் திருவிழா உதவுகிறது. மேலும், மாநில அரசு சார்பில் 4 நாட்கள் சுற்றுலா நிகழ்வும் நடைபெறுகிறது. டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்த திருவிழா நடைபெறும்.
செரண்டிபிட்டி கலை விழா, கோவா (Serendipity Arts Festival, Goa): கோவா மாநிலத்தில் உள்ள பஞ்சிம் நகரில் நடைபெறும் செரண்டிபிட்டி கலைத்திருவிழா காட்சி, செயற்திறன், சமையல் கலைகளை அங்கீகரிக்கவும், அதனை கற்றுக்கொள்ளவும் நடத்தப்படுகிறது. இந்தியா அளவில் இருக்கும் அனைவரும் அனைத்தையும் பெற வேண்டும் என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டு இந்த திருவிழா நடைபெறுகிறது. பிற விபரங்களுக்கு www.serendipityartsfestival.com என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.
தாமரா கார்னிவல், கூர்க் (The Tamara Carnival, Coorg): எழில்கொஞ்சும் அழகுடன் இருக்கும் கூர்க் மலைப்பகுதியில் தாமரா கார்னிவல் என்ற 10 நாட்கள் கொண்ட திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம் போன்றவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஜாஸின் இசை, லத்தினிய நடனம், நாட்டுப்புற இசை, மேஜிக் ஷோ, உள்ளூர் சுவை உணவு, நட்சத்திரங்களின் அழகு போன்ற ஒவ்வொரு விஷயமும் இதில் தனித்துவம் பெரும். கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு, தமரா கூர்க் பகுதியில் இத்திருவிழா நடைபெறும். பிற விபரங்களுக்கு www.thetamaracarnival.com என்ற இணையத்திற்கு சென்று சோதிக்கலாம்.
பூஷ் மேளா, சாந்திநிகேதன் (Poush Mela, Santiniketan): பூஷ் மேளா என்பது கிராமப்புறத்தில் இருக்கும் மக்களின் வண்ணமயமான திருவிழா ஆகும். உலகளவில் இருக்கும் சுற்றுலா பயணிகளும் கலந்துகொண்டு உற்சாகத்துடன் திருவிழாவை கொண்டாடுவார்கள். பெங்காலி மத்தபடி பௌஷின் 7 நாட்களில் கொண்டாடப்படும் திருவிழா கலாச்சாரத்தை வெளிப்படுத்தும். மேற்கு வங்காளம் மாநிலத்தின் பிர்பூம் மாவட்டம் சாந்திநிகேதன் நகரில் டிசம்பர் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை திருவிழா கொண்டாடப்படும்.
மெட்ராஸ் மியூசிக், சென்னை (Madras Music Season, Chennai): நடனம், இசை, நாடகம், விவாதம், ஆன்மீக சொற்பொழிவு, விரிவுரை என 2000-ற்கும் அதிகமான நிகழ்ச்சியை அரங்கேற்றி ஒவ்வொருவரையும் திளைக்க வைக்கும் நிகழ்ச்சி தென்னிந்தியாவின் சென்னை மாநகரில் நடைபெறும் மியூசிக் சீசன் ஆகும். இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் இருந்து பல கலைஞர்கள் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். டிசம்பரில் சென்னையில் உள்ள பல இடங்களில் இந்த திருவிழா நடைபெறும்.
ஹார்ன்பில் திருவிழா (Hornbill Festival): நாகா மக்களின் மரபுவழி கொண்டாட்டங்களில் முக்கியமாக இருப்பது ஹார்ன்பில் திருவிழா. நாகலாந்து மாநிலத்தில் உள்ள கோஹிமா நகர்களில் உள்ள பழங்குடியின மக்கள் ஆண்டுதோறும் தங்களின் திருவிழாக்களை கொண்டாடி மகிழ்கிறார்கள். அப்போது உணவு, விளையாட்டு, இசை, நடனம், நிகழ்ச்சி, அணிவகுப்பு, விளையாட்டு, விழாக்கள் போன்றவை என கோலாகலமாக திருவிழா நடைபெறும்.
கால்டன் நாம்சோட் (Galdan Namchot): லே & திபெத் பகுதிகளில் 14ம் நூற்றாண்டில் பௌத்த கொலுக்பா பள்ளியை நிறுவிய துறவி மற்றும் அறிஞரான சோங்கபா அவர்களின் பிறந்தநாள் & புத்தரை நினைவுகூரும் வகையில் திருவிழா கொண்டாடப்படுகிறது. லடாக் பகுதியில் வசித்து வரும் மக்களால் கேல்டன் நாம்சாட் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
பெரும்திட்டா தரவாட், கோட்டம்குழி (Perumthitta Tharavad, Kottamkuzhy): கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டம், பெரும்திட்டா தரவாடு கொத்தங்குழி பகுதியில் ஆண்டுதோறும் 10 நாட்கள் தெய்யம் திருவிழா நடைபெறுகிறது. இது கேரளாவின் முதன்மை திருவிழாவில் ஒன்றாகும். அன்றைய நாளில் கேரளாவின் பழமையான சடங்குகள் நடைபெறும்.