
பிப்ரவரி 08, புதுடெல்லி (New Delhi News): இந்தியாவின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்றாகவும், இந்திய தலைநகரை கொண்ட மாநிலமாகவும் இருப்பது டெல்லி (Delhi). டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் 2025 (Delhi Assembly Elections 2025 Results) வாக்குப்பதிவு, கடந்த 05 பிப்ரவரி 2025 நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, 08 பிப்ரவரி 2025 இன்று டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2025 வெளியாகிறது. இன்று காலை முதலே வாக்குகள் எண்ணப்பட்டு தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.
ஆம் ஆத்மி முக்கிய வேட்பாளர்கள்:
2025 டெல்லி மாநில தேர்தலில் அம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் அதிஷி மர்லேனா (Delhi CM Atishi Marlena Constituency), கல்காஜி (Kalkaji Constituency) சட்டப்பேரவை தொகுதியில் இருந்து வேட்பாளராக களமிறங்கி இருந்தார். துணை முதல்வர் மனிஷ் சிசோடியா (Manish Sisodia Constituency) ஜங்புரா (Jangpura Constituency) சட்டப்பேரவை தொகுதியில் இருந்து களமிறங்கினார். அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி மூத்த தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal Constituency) புதுடெல்லி (New Delhi Constituency) தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி இருந்தார். Erode East By Election Result: முதல் சுற்றில் திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதக வேட்பாளர் 6800+ வாக்குகள் பின்னடைவு.!
பாஜக தீவிர பிரச்சாரம்:
டெல்லி மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி தொடர்ந்து ஆட்சி செய்து வந்தது. அதற்கு முன்னதாக காங்கிரஸ் வசம் நீண்ட காலமாக ஆட்சி இருந்தது. 1993 முதல் 1997 வரை 5 ஆண்டுகள் பாஜக ஆட்சி இருந்தது. 2025 டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில், எப்படியாவது வெற்றி அடைய வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என பலரும் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து இருந்தனர். மேலும், அம்மாநில அரசியல் சூழலும், மிகப்பெரிய எதிர்ப்பு நிலையை கண்டது.
மும்முனை போட்டி:
மதுபான கொள்கையில் நடந்த ஊழல், யமுனை நதியை சுத்தம் செய்யாதது, அரவிந்த் கெஜ்ரிவால் & மனிஷ் சிசோடியா கைது என பலகட்ட பிரச்சனைகளை ஆம் ஆத்மி அரசு எதிர்கொண்டது. தேசிய அளவிலான தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொண்டாலும், மாநில அளவில் காங்கிரசின் ஆட்சியை வீழ்த்தி அரசு பொறுப்புக்கு வந்த ஆம் ஆத்மி, மாநில தேர்தலில் தனித்தே களம்கண்டது. இதனால் டெல்லி மாநில தேர்தல் 2025 மும்முனை போட்டியை அங்கு ஏற்படுத்தியது. இதனால் ஆம் ஆத்மி அரசு மீதான நெருக்கடி கூடுதலாக அதிகரித்து, அரசியல் சரிவை உண்டாக்கியது.
பாஜக முன்னிலை:
இதனிடையே, இன்று டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2025 வெளியாகும் நிலையில், காலை 10 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 70 தொகுதியில் பாஜக 39 தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 30 தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 1 தொகுதியில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. டெல்லி மாநிலத்தில் 35 தொகுதியில் வெற்றிபெறும் கட்சி ஆட்சியை அமைக்க உரிமை கோரலாம். ஆனால், பாஜக 49 தொகுதிகளை கடந்து காலை 10 மணி நிலவரப்படி முன்னிலையில் இருக்கிறது. இதனால் டெல்லியில் ஆட்சியை பிடிக்க போவது யார்? பாஜக ஆட்சிக்கு வருமா? என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆம் ஆத்மி - பாஜக கடும் போட்டி:
அதேநேரத்தில், டெல்லி மாநில அரசியலில் முக்கியமாக கவனிக்கப்பட்ட அம்மாநில முதல்வர் அதிஷி, துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை, பின்னடைவு என மிக குறுகிய வாக்குவித்தியாசத்துடன் காணப்படுகின்றனர். காலை 10 மணிக்கு முன்பு பாஜக 50 தொகுதிகளை கடந்து முன்னிலை பெற்ற நிலையில், ஆம் ஆத்மி முக்கிய வேட்பாளர்கள் பின்னடைவை எதிர்கொண்டு இருந்தனர். இதனிடையே, காலை 10 மணிக்கு பின்னர் வெளியான தகவலின்படி ஆம் ஆத்மி வேட்பாளர்கள் மொத்தமாக 30 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர்.