பிப்ரவரி 08, சித்தோடு (Erode News): ஈரோடு மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத்தொடர்ந்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று இடைத்தேர்தல் (Erode East By Election Result) முடிவுகள் தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்படுகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார் உதயசூரியன் சின்னத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி மைக் சின்னத்திலும் போட்டியிட்டு இருந்தனர். Coimbatore Central Prison: கோவை மத்திய சிறையில் கைதி அதிர்ச்சி வீடியோ; கொலை செய்ய சதித்திட்டம்? பகீர் வீடியோ வைரல்.!
திமுக வேட்பாளர் முன்னிலை:
இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் (VC Chandrakumar) 7,961 வாக்குகள் முதல் சுற்றின் முடிவில் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் (Naam Tamilar Katchi) வேட்பாளர் சீதாலட்சுமி (NTK Seethalatsumi)1,081 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் வாக்கு வித்தியாசம் 6880 என்ற நிலையில் இருக்கிறது. இதனால் தொடக்கத்தில் இருந்தே திமுக வேட்பாளர் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார். இடைத்தேர்தலில் 67.97% வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.