Delhi Court | Sexual Abuse Rape (Photo Credit: Wikipedia / Freepik)

ஜூன் 28, புதுடெல்லி (Delhi High Court): கடந்த 2014 ஜூன் மாதம் 18ம் தேதி நண்பர்களுடன் இரவு விருந்தில் கலந்துகொண்ட நைஜீரிய இளம்பெண், தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அவர் ஆட்டோவுக்காக டெல்லி ஜனக்பூர் பகுதியில் காத்திருந்தபோது, காரில் வந்த இருவர் பெண்ணை வீட்டிற்கு கொண்டு சென்று விடுவதாக தெரிவித்துள்ளனர்.

காரில் இளம்பெண் ஏறியதும், அவரை பாலியல் பலாத்காரம் செய்த நபர்கள், மெட்ரோ இரயில் தூண் அருகே தூக்கிவீசி தப்பி சென்றனர். இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி தினேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை டெல்லி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குற்றவாளிகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். BJP Leader Shoot Wife: மதுபழக்கத்தை கண்டித்த மனைவி சுட்டுக்கொலை; பாஜக தலைவர் பகீர் செயல்.. மகள் – மருமகன் கண்முன் பயங்கரம்.! 

அந்த மனுவில், தாங்கள் வெளிநாட்டு பெண்ணுக்கு உதவி செய்தோமே தவிர்த்து பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. எங்களது விந்தணு பெண்ணின் டி.என்.ஏ சோதனையில் இருப்பதாக உறுதி செய்யப்படவில்லை. எங்களுக்கு குடும்பம் இருக்கிறது. ஒருவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆகையால், எங்களை நிரபராதிகள் என தீர்ப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என குறிப்பிட்டனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் முக்தா குப்தா தலைமையிலான தனி அமர்வில் நடைபெற்றது. வழக்கு விசாரணை அனைத்தும் நிறைவு பெற்று நேற்று தீர்ப்பு வெளியிடப்பட்டது. இன்று நீதிபதி முக்தா குப்தாவின் பணி ஓய்வு பெரும் நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீதிபதி தனது தீர்ப்பில், "குற்றவாளிகளான தினேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகியோரின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது. பெண்மணி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர், அவரின் மீது கயவர்கள் நடத்திய ஊடுருவல் மட்டுமே கற்பழிப்புக்கு சாட்சியாக போதுமானது. அவர் பொய்யுரைக்க தேவையில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விந்து இருந்து, அதை டி.என்.ஏ சோதனையில் உறுதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை" என கூறினார்.