ஜூன் 28, போபால் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால், ரதிபட் காவல் எல்லைக்குட்பட்ட சாய் நகர் காலனி பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திர பாண்டே. இவர் அப்பகுதி பாஜக தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். மதுபோதைக்கு அடிமையானவர். .
ராஜேந்திர பாண்டேவின் மனைவி ஷீலா பாண்டே. ராஜேந்திர பாண்டேவின் மதுபழக்கத்தை மனைவி கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். இதனால் இருவரும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் நடப்பது இயல்பு என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று தனது வீட்டிற்கு மதுபோதையில் வருகை தந்த ராஜேந்திராவுக்கும், அவரின் மனைவி ஷீலாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. இன்று நள்ளிரவு 01:00 மணியளவில் சண்டை தொடர்ந்து வந்த நிலையில், ஆத்திரமடைந்த ராஜேந்திர பாண்டே மனைவியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். Ravi Kishan Daughter: அக்னிவீர் திட்டத்தின் கீழ், தனது மகளை நாட்டிற்கு அர்ப்பணித்த பாஜக எம்.பி; இராணுவ அதிகாரியாக பதவியேற்பு.!
இதனால் இடுப்பில் குண்டு பாய்ந்து நிலைகுலைந்த பெண்மணி அங்கேயே சரிந்து விழுந்துள்ளார். ராஜேந்திர பாண்டே - ஷீலா தம்பதியின் மகள் - மருமகன் கண்முன் துயரம் நடந்துள்ளளது. இதனையடுத்து, தம்பதியின் மகள் மற்றும் மருமகன் விரைந்து செயல்பட்டு ஷீலாவை அங்குள்ள சிராயு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை 03:00 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல் துறையினர் ஷீலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மனைவியை கொலை செய்த பாஜக பிரமுகர் ராஜேந்திர பாண்டே தலைமறைவாகியுள்ளதால், அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.