டிசம்பர் 07, புதுடெல்லி (New Delhi): டெல்லியில் உள்ள மாநில கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு வழக்கமாக ஜனவரி மாதம் 01ம் தேதி முதல் 15ம் தேதி வரையில் குளிர்கால விடுமுறை என்பது வழங்கப்படும். அதாவது, குறைந்தபட்சம் 15 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
டெல்லி காற்று மாசு: ஆனால், நடப்பு ஆண்டில் காற்று மாசுபாடு காரணமாக, வீட்டில் இருந்த மாணவர்கள் படிக்கச் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் 09ம் தேதி பள்ளிகள் மூடப்பட்டு, பின் 28ம் தேதியில் தான் மீண்டும் திறக்கப்பட்டன. எஞ்சிய நாட்களில் வீட்டில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றன.
குளிர்கால விடுமுறை: டெல்லியை ஆண்டுக்கு ஒருமுறை நவம்பர், டிசம்பர் மாதங்களில் காற்று மாசு தொடர்பான பிரச்னையும், அதனைத்தொடர்ந்து ஜனவரியில் கடும் குளிரும் வாட்டிவதைக்கும். இதனை கருத்தில் கொண்டு அரசும் மாணவர்களின் நலன்கருதி 15 நாட்கள் வரை விடுமுறை வழங்கும். இந்நிலையில், நடப்பு ஆண்டில் எதிர்பாராத விடுப்புகள் மாணவர்களுக்கு நிறைய வழங்கப்பட்டுள்ளன. MSD Fanboy Student Suspended: தேர்வில் ஒவ்வொரு பதிலில் "தல., தல., தல"... பள்ளி மாணவரை இடைநீக்கம் செய்து, அதிரடி காண்பித்த பள்ளி நிர்வாகம்..!
கற்றல் பிரச்சனையை சரிசெய்ய விடுமுறை மாற்றி அமைப்பு: இதனால் கற்றலில் ஏற்படும் பாதிப்பை கருத்தில்கொண்டு, குளிர்கால விடுமுறை என்பது டெல்லியில் மாணவர்களுக்கு குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில கல்வித்துறை கல்வி நிறுவனங்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
சுற்றறிக்கை: அந்த அறிவிப்பில், "டெல்லி மாநில பள்ளிகளில் குளிர்கால விடுமுறை என்பது ஜனவரி 01ம் தேதி முதல் 15ம் தேதி வரை எப்போதும் விடப்படும். ஆனால், நடப்பு ஆண்டில் காற்றின் மாசு பிரச்சனை காரணமாக, மாணவர்கள் அவதிப்படாமல் இருக்க நவம்பர் மாதம் 09ம் தேதி முதல் 28ம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறை தேதி: இவற்றில் முதல் 10 நாட்கள் குளிர்கால விடுமுறையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் நடப்பு ஆண்டுக்கான குளிர்கால விடுமுறை என்பது ஜனவரி மாதம் 01ம் தேதி முதல் 06ம் தேதி வரை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.