Dunki Movie Celebration (Photo Credit: @ANI X)

டிசம்பர் 21, மும்பை (Mumbai): ராஜ்குமார் இராணி இயக்கத்தில், கௌரி கான் மற்றும் ராஜ்குமார் இராணி ஆகியோரின் தயாரிப்பில், இன்று உலகளவில் வெளியாகியுள்ள திரைப்படம் டங்கி (Dunki). ரூபாய் 120 கோடி செலவில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் ரெட் சில்லி என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

டங்கி-க்கு இடையே அடுத்தடுத்து 2 படங்கள்: கடந்த 2020 ஆம் ஆண்டு ராஜ்குமார் இராணி ஷாருக்கானுடன் இணைந்து படத்தில் பணியாற்ற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக அவை தள்ளிப்போனது. அதனைத்தொடர்ந்து ஷாருக்கான் தற்போது ஜவான், பதான் என இரண்டு மெகா ஹிட் படங்களையும் கொடுத்து விட்டார். Chennai Crime News: பட்டப்பகலில் வாலிபர் வெட்டி படுகொலை… சென்னையில் பரபரப்பு..! 

படத்தின் மையக்கரு: டங்கி படத்தின் அறிவிப்புகளும் உறுதி செய்யப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தன. டங்கி திரைப்படம் இலண்டன் செல்ல காத்திருக்கும் நண்பர்களை மையப்படுத்தி கலக்கல் படமாக் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கௌசல், மூமன் இராணி, சதீஷ் ஷா, ஜோதி சுபாஷ் உட்பட பலரும் நடித்துள்ளனர்.

இன்று வெளியானது: இப்படம் இரண்டு மணி நேரம் 40 நிமிடம் ஓடுகிறது. படத்தின் டிரைலர் மற்றும் பாடல் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. தற்போது இன்று இப்படம் சர்வதேச அளவில் வெளியாகி உள்ள நிலையில், மும்பையில் ஷாருக் கான் ரசிகர்கள் கெயிட்டி கேலக்சி (Gaiety Galaxy Theatre)திரையரங்கு முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

வடமாநிலங்களில் கொண்டாட்டம்: ஷாருக்கான் இந்திய திரையுலகின் கிங் கான் என்ற பட்டத்துக்கு ஏற்றாற்போல, உலகமே திரும்பி பார்க்கும் வகையிலான படங்களை அடுத்தடுத்து கொடுத்து வருகிறார். தற்போது டங்கி திரைப்படமும் அவரின் ரசிகர்களால் வடமாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.