அக்டோபர் 11, புதுடெல்லி (New Delhi): மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 5 மாநிலங்களிலும் வெவ்வேறு நாட்களில் நடைபெறும் தேர்தல் முடிவுகள், டிசம்பர் 3 அன்று ஒரேகட்டமாக வெளியாகிறது.
இந்நிலையில், இராஜஸ்தான் மாநிலத்தில் (Rajasthan State Assembly Poll 2023) தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஏனெனில் தேர்தல் நடைபெறுவதாக இருந்த நவம்பர் 23ல் அம்மாநிலத்தில் பல்வேறு சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனால் மக்கள் சுபநிகழ்ச்சிகளுக்கு சென்றுவிட்டால், வாக்களிக்கும் மையங்கள் ஈயாடும் நிலை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு தற்போது அம்மாநில தேர்தல் தேதிகள் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. Shocking Video: 9/11 தாக்குதல் நினைவிடத்தில் இளைஞர் செய்த சர்ச்சை காரியம்: அதிர்ந்துபோன பார்வையாளர்கள்.!
அதன்படி, இராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி நவம்பர் 25 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் திட்டமிட்டபடி டிசம்பர் 05ம் தேதி வெளியாகும். அக்.30ம் தேதி முதல் நவம்பர் 06ம் தேதிக்குள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
நவ. 07ம் தேதி வேட்பு மனுதாக்கல் இறுதி செய்யப்படும். 09ம் தேதிக்குள் வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுவை திரும்ப பெறலாம். நவ.25ம் தேதி தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து, டிசம்பர் 03ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். தேர்தல் முடிவுகள் டிசம்பர் 05க்குள் இறுதி செய்யப்படும்.
தேர்தல் தேதி மாற்றம் குறித்து ஆணையம் தெரிவித்த அறிக்கையில், மக்கள் மற்றும் அம்மாநில அரசியல்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பலதரப்பில் வந்த கோரிக்கையை தொடர்ந்து தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.