அக்டோபர் 07, புதுடெல்லி (New Delhi): நம்மில் பலருக்கும் படிப்பது என்றால் சற்று கடினம் தான். படிக்கும் பருவத்தை தாண்டிய பிறகு தான் படிப்பின் அருமை புரியும். அப்பொழுது படிக்க நேரமும் இருக்காது மனநலம் ரீதியாக படிக்கவும் இயலாது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் படிப்பிலும் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள் ஊனமுற்றோர். சமீபத்தில் வெளிவந்த பொது மற்றும் போட்டித் தேர்வுகளிலும் (Public and Competitive examinations) தேர்ச்சி பெற்று பல ஊனமுற்றோர் சாதனை புரிந்துள்ளனர். அவர்களில் ஒரு சிலரை காணலாம்.
ஒரே கையில் போட்டி தேர்வில் 760 ரேங் அகிலா:
தனது கையை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத கேரளாவை சேர்ந்த அகிலா 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் உயரிய பதவிகளுக்கான யுபிஎஸ்சி போட்டித் தேர்வில் 760வது ரேங் வாங்கி தேர்ச்சி பெற்றுள்ளார். தனது 5-வது வயதில் பேருந்து பயணத்தின் போது ஏற்பட்ட விபத்தின் வலது கையை இழந்துள்ளார். பிறகு தனது வேலைகளை இடது கையால் செய்யப் பழகியுள்ளார். தனது பள்ளி பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியும் பெற்றுள்ளார். ஐஐடி மெட்ராஸில் எம்ஏ படித்த பிறகு சிவில் சர்வீஸுக்கு தயாராகத் தொடங்கியுள்ளார். முதல் இரண்டு முறைகளும் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர் ஒரு வருடத்தின் விடாமுயற்சிக்கு பிறகு மூன்றாம் முறையில் தேர்ச்சி பெற்றார். Honey Trap Case: ‘ஹனி ட்ராப்’ உஷார்.. ஆபாச வீடியோக்கள், அலறிய நபர்கள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல் துறையினர்.!
தன்னம்பிக்கை இழக்காத சிறுவன்:
மின்சாரம் தாக்கி இரண்டு கைகளையும் இழந்த சிறுவன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்த க்ரித்தி வர்மா தனது 4ம் வயதில் மாடியில் விளையாடிக் கொண்டிருக்கையில் எதிர்பாரா விதமாக வீடை ஒட்டிய இருந்த கம்பியைப் பிடித்திருக்கிறார். அதில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால் தனது இரு கையையும் இழந்துள்ளார். பிறகு தந்தை குடும்பத்தை விட்டு சென்ற பின் கூலி வேலை செய்யும் தாயுடன் வசித்து வருகிறார். க்ரித்தி வர்மா 8ம் வகுப்பில் படிப்பு திறன், ஓவியம் வரைதல், என தன் வேலைகள் செய்வதை கண்டு அவரது ஆசிரியை ஆனந்தி வேறு அரசு பள்ளியில் சேர்த்தும் அவருக்கான உதவியையும் செய்துள்ளார். கைகள் இழந்தும், தந்தையின்றியும் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் 437 மதிப்பெண் பெற்றிருப்பது பலருக்கும் தன்னம்பிக்கை அளித்துள்ளது.
சாதிக்க கை கால்கள் தேவை இல்லை நிரூபித்த சுரஜ்:
2017ம் ஆண்டும் விபத்தில் தனது இரு கால்கள், வலது கை, இடது கையில் இரு விரல்கள் இழந்த 27 வயது இளைஞன் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார். குறிப்பாக இவர் தனியார் மையம் துணையின்றி தன்னிச்சையாக படித்து வென்றிருக்கிறார் உத்திரபிரதேசத்தை சேர்ந்த சுரஜ் திவாரி.இவர் தனது கல்லூரி காலத்தில் ஏற்பட்ட விபத்தில், கை கால்களை இழந்துள்ளார். அதிலிருந்து மெதுவாக மீண்டு கொண்டிருக்கும் போது அவரின் அண்ணனின் இறப்பு, குடும்ப வறுமை, மருத்து செலவுகள் என அனைத்தும் அவரை மன அழுத்தத்தில் தள்ளியது. இப்பினும் தனது குடும்பம் ஆறுதல் தர மன அழுத்தத்தை தாண்டி போராட்ட குணத்துடன் மீண்டு வந்தார் சுராஜ். விபத்தின் காரணமாக தனது பிஎஸ்சி படிப்பை கைவிட்டார். மீண்டும் 6 மாதம் கழித்து பி.ஏ ரஷ்ய இலக்கியம் படிப்பி சேர்ந்தார். அதே படிப்பில் முதுகலை பட்டமும் பெற்றார். பிறகு யுபிஎஸ்சி தேர்வில் முதல் முறையிலேயே வெற்றியைக் கண்டார். ஆனால் நேர்முகத் தேர்வில் தோல்வியை தழுவ மனம் தளராமல் மீண்டும் முயற்சி செய்து, 917ம் இடம் பிடித்து தேர்ச்சி பெற்றிருக்கிறார். கால்கள், கை இல்லாவிடினும் சாதிக்க மூன்று விரல்கள் போதுமே என சாதித்துக் காட்டியிருக்கிறார் சுரஜ் திவாரி.