ஜூன் 17, கலிபோர்னியா (World News): உலகளவில் மக்களாட்சியை தேர்ந்தெடுக்கும் நாடுகளில், தேர்தல் வாக்குப்பதிவுக்கு பல்வேறு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், அவை அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து, முறைகேடான வாக்குகள் விவகாரம் குறித்த ஐயத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. நீதிமன்றம் வரை சென்றாலும், இவிஎம் மெஷின்களில் எந்த விதமான தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வாக்குகளை மாற்றவோ சேர்க்கவோ இயலாது என அரசுத்தரப்பு உறுதியாக கூறுகிறது.
முறைகேடாக சேர்க்கப்பட்ட வாக்குகள்:
இதனிடையே, அமெரிக்காவின் அதிபர் தேர்தலுக்கான சுயேச்சை வேட்பாளர் ராபர்ட் கென்னடி. இவர் தனது எக்ஸ் பக்கத்தில், "அமெரிக்காவில் உள்ள புவேர்ட்டோ ரிக்கோ பகுதியில் நடைபெற்ற முதன்மை தேர்தல் வாக்குபதிவில், மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு பல நூற்றுக்கணக்கான வாக்குகள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளது என அசோசியேட் பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நல்வாய்ப்பாக காகித வகுப்பதிவுகள் வாயிலாக உண்மையான வாக்குகள் எண்ணிக்கை வலுசேர்த்து. TN Weather Update: "கடும் வெயிலும், மீனவர்களுக்காக எச்சரிக்கையும்".. அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு.. முழு விபரம் இதோ..!
அதிபர் வேட்பாளரின் வாக்குறுதி:
ஆனால், காகித வாக்குகள் இல்லாத இடங்களில், அங்குள்ள அதிகார வரம்புகளில் நடப்பது என்ன?. அமெரிக்கா மக்கள் தங்களின் வாக்குகள் ஒவ்வொன்றையும் எண்ணி செலுத்தும் வாக்கை திருட இயலாது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். தேர்தல் விஷயங்களில் மின்னணு இயந்திரங்களின் குறுக்கீட்டை தவிர்க்க, நாம் அனைவரும் காகித வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும். நான் அதிபராகினால் எனது நிர்வாகத்திற்கு காகித வாக்குசீட்டுகள் மட்டுமே தேவைப்படும். நேர்மையான, நியாயமான தேர்தலுக்கு நாங்கள்ள உத்திரவாதம் அளிக்கிறோம்" என தெரிவித்தார்.
எலான் மஸ்கின் அதிர்ச்சி தகவல்:
இதற்கு பதிலளித்த எலான் மஸ்க் (Elon Musk), "மின்னணு வாக்குப்பதிவு (EVM Machine for Voting) இயந்திரங்கள் ஒழிக்கப்பட வேண்டியவை ஆகும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மனிதர்கள் உதவியுடன் அதனை ஹேக் செய்யும் ஆபத்து சிறியளவில் இருந்தாலும், அதிகளவு அதற்கான வாய்ப்புகள் உள்ளன" என தெரிவித்தார்.
ராகுல் காந்தியும் வழிமொழிந்தார்:
இதனை மேற்கோளிட்டு காண்பித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi), தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவில் இவிஎம்கள் ஒரு கருப்பு பெட்டி போன்றவை, அவற்றை யாரும் ஆராய அனுமதிக்கப்படுவதில்லை. இந்திய தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை குறித்து கடுமையான கவலைகள் முன்னரில் இருந்து எழுப்பப்படுகின்றன. நிறுவனங்கள் பொறுப்புக்கூறல் இல்லாதபோது ஜனநாயகம் என்பது ஒரு ஏமாற்று நாடகமாக மாறி, மோசடிக்கு ஆளாகிறது" என கூறி இருக்கிறார்.