Fact Check (Photo Credit: Twitter)

மே 31, புதுடெல்லி (Cyber Alert): சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் அதிகரித்ததில் இருந்து, அதனை வைத்து மோசடி செய்யும் நபர்களின் செயல்பாடுகளும் அதிகரித்துவிட்டன.

யூடியூப், வாட்சப், முகநூல் போன்ற பல்வேறு செயலிகள் மூலமாக, அரசிடம் இல்லாத திட்டங்களை இருப்பதாக கூறி, அதற்கு பதிவு செய்யுங்கள் என போலியான இணையதளத்தையும் தொடங்கி நமது தகவலை திருடி வருகின்றனர். Model Rape Complaint: மும்பை மாடல் அழகியை கற்பழித்து மதம்மாற வற்புறுத்தி சித்ரவதை; நெஞ்சை பதறவைக்கும் பரபரப்பு புகார்..!

இந்த நிலையில், நிதி கையான் மூலம் ஷ்ரமிக் சாமான் யோஜனா திட்டம் கீழ் மத்திய அரசு பெண்களுக்கு மாதம் ரூ.5100 வழங்குகிறது என்ற போலியான தகவல் யூடியூப் சேனல் மூலமாக பிரபலமாக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த விஷயத்தை கவனத்தில் கொண்ட மத்திய அரசு, அவ்வாறான திட்டம் ஏதும் இல்லை என்று கூறி, மேற்படி வீடியோ அல்லது பகிர்வு தகவலின் பேரில் வரும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளது.