மே 31, மகாராஷ்டிரா (Mumbai Crime News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில், இளம் மாடல் அழகி புகார் அளித்தார். அந்த புகாரில், "என்னை தன்வீர் அக்தர் முகம்மத் லேக் கான் என்பவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். அவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
அவர் வழங்கிய புகாரில், "நான் மும்பையை சேர்ந்தவர். எனக்கு மாடலிங் துறையின் மீது ஆர்வம் இருந்ததால், அது சம்பந்தமாக பணியாற்றி வந்தேன். பீகார் மாநிலத்தில் உள்ள பகல்பூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு சென்றபோது, ராஞ்சியை சேர்ந்த மேற்கூறிய தன்வீர் அக்தர் என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது. அவர் முதலில் நம்பிக்கை வழங்குவது போல பேசினார்.
பின்னாட்களில் அவர் என்னை மதம் மாறினால் பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகை ஆகலாம். நான் உன்னை நடிகை ஆக்குகிறேன் என்று பல விஷயங்களை கூறி பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். நான் மதம் மாறுவதற்கு மறுப்பு தெரிவித்தபோது, என்னிடம் இருந்து பெற்ற போட்டோக்களை வைத்து மிரட்ட தொடங்கினார். WTC Final 2023: ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள தீவிர பயிற்சி; மாஸ் செய்யும் இந்திய அணி வீரர்கள்.. அசத்தல் வீடியோ வெளியிட்ட பிசிசிஐ .!
மும்பைக்கு என்னை கட்டாயப்படுத்தி வரவைத்த தன்வீர், எனது பெயரையும் ஒருகட்டத்தில் மாற்றினார். பின்னர் என்னையே நீ திருமணம் செய்துகொள் என்று கட்டாயப்படுத்தினார். கடந்த 2021ல் இருந்து இக்கொடுமை நடக்கிறது. ஒரு சமயம் என்னை பேங்காங்-க்கு அழைத்தார்.
நான் செல்ல மறுப்பு தெரிவித்தபோது எனது அம்மா, சகோதரர் ஆகியோருக்கு எனது ஆபாச போட்டோக்களை அனுப்பி மிரட்டினார். வேறு வழியின்றி அவருடன் பேங்காக் சென்ற சூழல், என்னை அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதற்கு மேல் என்னால் அவரின் கொடுமைகளை தாங்க முடியாது. அவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் காவல் துறையினர், புகாரை மும்பையில் இருந்து ராஞ்சி காவல் துறைக்கு மாற்றி கொடுத்ததன் பேரில் காவல் துறையினர் இந்திய குற்றப்பிரிவு 376(2)(N), 328,506,504,323, 62 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.