Tamilnadu Rains (Photo Credit : @TamilTheHindu X)

அக்டோபர் 21, சென்னை (Chennai News): தமிழகத்துக்கு அதிக மழைபொழிவைத் தரும் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. இதன் அறிகுறிகளாக வங்கக் கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மதியம் வலுப்பெறும். தற்போதைய நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

புயல் உருவாகும் வாய்ப்பு:

இதனால் வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. தற்போது தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், அரபிக்கடலில் உருவான தாழ்வு மண்டலத்தால் தென்தமிழகத்திலும் மழை தொடருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கி வரும் நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றால், வடமாவட்டங்களில் வரும் நாட்களில் கூடுதல் மழை பெய்யலாம். குறிப்பாக வடகடலோர மாவட்டங்கள், வட தமிழக மாவட்டங்களில் கனமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. வானிலை: புயல் உருவாகும் அபாயம்.. தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. வட தமிழகத்தில் மழை கொட்டும்.!

எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?

இந்நிலையில் 21 ஆம் தேதியான இன்று தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அதிகனமழைக்கான சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளைய வானிலை (Tomorrow Weather):

22 ஆம் தேதியான நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

23 & 24 ஆம் தேதி மழை கொட்டும் மாவட்டங்கள்:

23ஆம் தேதியை பொறுத்தவரையில் சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி பகுதிகளுக்கு மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. 24 ஆம் தேதியை பொறுத்தவரையில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.