Accident File Pic (Photo Credit: @ETVBharatTN X)

பிப்ரவரி 18, போபால் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், பிந்த் (Bhind) மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த, வேன் மீது டிப்பர் லாரி மோதி விபத்து (Accident) ஏற்பட்டது. தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் சிக்கி 5 பேர் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். Gyanesh Kumar: ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு.!

5 பேர் பரிதாப பலி:

இதனையடுத்து, இவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், 12 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் ஜவஹர்புரா கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

சோக சம்பவம்:

இவர்கள் திருமண விழாவில் கலந்துகொண்டு, வீடு திரும்பி கொண்டிருந்தபோது, செல்லும் வழியில் சாலையோரம் வேன் நிறுத்தப்பட்டுள்ளது. சிலர், வேனில் அமர்ந்து இருந்தனர். மற்றவர்கள் சாலையோரம் இறங்கி நின்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி, வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.