ஆகஸ்ட் 04, ஜார்கண்ட் (Jharkhand News): ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் (Former Jharkhand CM Shibu Soren) உடல்நலக்குறைவால் காலமானார். முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனர்களில் ஒருவராகவும், 38 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் சிபு சோரன். இவர் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராட்டத்தை முன்னெடுத்தார். மேலும் 3 முறை ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வராகவும் இருந்தார்.
வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெட்ரா சிபு சோரன் :
ஜார்கண்ட் மாநிலத்தில் குருஜி என்று அழைக்கப்பட்ட சிபு சோரன், பழங்குடியின மக்களுக்கு சமத்துவமான அடையாளத்தை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தார். 81 வயதான சிபு சோரன் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த ஒரு மாதமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பல ஆண்டுகளாகவே உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்கோளாறு தீவிரமடைந்து வென்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். IBPS Clerk Recruitment: வங்கிகளில் கிளர்க் வேலைவாய்ப்பு.. 10,277 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?.!
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் காலமானார் :
இந்த நிலையில் இன்று டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையான கங்காராம் மருத்துவமனையில் அவர் காலமானார். அவரது மறைவு ஜார்கண்ட் மாநிலம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அரசியல், சமூக அமைப்புகளும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே தனது தந்தையின் மறைவு தொடர்பாக எக்ஸ் வலைதளப்பக்கத்தில் சிபு சோரனின் மகனும், அம்மாநிலத்தின் முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் வருத்தம் :
आदरणीय दिशोम गुरुजी हम सभी को छोड़कर चले गए हैं।
आज मैं शून्य हो गया हूँ...
— Hemant Soren (@HemantSorenJMM) August 4, 2025