RBI Logo (Photo Credit: Wikimedia Commons)

மார்ச் 28, சென்னை (Chennai News): 2024-2025 நிதியாண்டு மார்ச் 31ஆம் தேதி முடிவடையும் வேளையில், அதே நாளில் ரம்ஜான் பண்டிகை வருகிறது. இதனால் வங்கி செயல்படுமா அல்லது விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுகிறது. ரம்ஜான் பொது விடுமுறையாக இருந்தபோதிலும், நிதியாண்டின் இறுதி நாள் என்பதால், வங்கி செயல்படும் என இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. CA Final Exams: இனி ஆண்டுக்கு 3 முறை இறுதித்தேர்வு.. சிஏ தேர்வு முறையில் அதிரடி..!

வங்கி விடுமுறை நாட்கள்:

அரசாங்க கொடுப்பனவுகள் மற்றும் வரி தொடர்பான நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கியமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் மார்ச் 31ஆம் தேதி அன்று திறந்திருக்கும். மேலும், மார்ச் 29ஆம் தேதி, மாதத்தின் 5வது சனிக்கிழமை வங்கிகள் செயல்படும். மார்ச் 30ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று, வரி செலுத்துதல் போன்ற அரசு தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மட்டும் திறந்திருக்கும். வாடிக்கையாளர்கள் NEFT, RTGS போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகளையும், மொபைல் பேங்கிங் மற்றும் ஏடிஎம்-கள் மூலம் பில் பேமெண்ட்களையும் தொடர்ந்து செய்யலாம். இருப்பினும், குறிப்பிட்ட நேரங்கள் மற்றும் சேவைகள் குறித்து உள்ளூர் கிளைகளுடன் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.