Ramadan 2025 (Photo Credit: Team LatestLY)

மார்ச் 27, சென்னை (Festival News): உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் பண்டிகை ரம்ஜான் (Ramadan) ஆகும். 30 நாட்கள் நோன்பு கடைபிடிக்கும் புனித ரமலான் மாதம் இந்த 2025ஆம் ஆண்டு மார்ச் 01ஆம் தேதி தொடங்கியது. ஒரு சில நாடுகளில் சந்திர நாட்காட்டி காரணமாக பிப்ரவரி 28ஆம் தேதியே ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. ரமலான் மாதத்தில் காலை சூரிய உதயத்தில் இருந்து மாலை சூரியன் மறைவு வரை இஸ்லாமியர்கள் உணவு உண்ணாமல் தண்ணீர் குடிக்காமல் விரதம் கடைபிடிப்பது வழக்கம். ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாம் மதத்தின் 5 முக்கிய கடமைகளில் ஒன்றாகும். சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் பாராமல் நோன்பு நோற்பது உண்டு. ரமலான் மாதத்தின் கடைசி நாளில்தான் 'ஈத்' என்னும் 'ரம்ஜான்' பண்டிகை கொண்டாடப்படுகிறது. புனித ரமலான் மாதத்தின் வரலாறு, முக்கியத்துவம் பற்றி இப்பதிவில் பார்ப்போம். Annadanam Benefits: அன்னதானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? விபரம் உள்ளே.!

ரமலான் நோன்பு:

புனிதமான ரமலான் (Ramzan 2025) மாதத்தில் சூரிய உதயம் தொடங்கியது முதல் அஸ்தமாகும் வரை தண்ணீர், உணவு என எதுவும் சாப்பிடாமல் இருப்பதும், பிற பாவ செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பதும்தான், ரமலான் நோன்பின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. மாலை வேளையில் மட்டும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு தண்ணீர் குடித்து அந்நாளின் நோன்பை நிறைவு செய்வார்கள். பிறகு, தங்கள் குடும்பத்தினருடன் வழக்கமான உணவுகளை சாப்பிடுவார்கள். முக்கியமாக, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், சிறு குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் ரமலான் நோன்பு இருக்கமாட்டார்கள்.

ரமலான் முக்கியத்துவம்:

ரமலான் மாதத்தில் தொழுகை, குரான் வாசித்தல் ஆகியவை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இது இறை வழிபாட்டிற்கான மாதம் என்பதால் வழிபாட்டு நடைமுறைகளை கடைப்பிடிப்பார்கள். ரமலான் மாதத்தின் நிறைவாக 'ஈத் உல் ஃபிர்' எனப்படும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது புனித ரமலான் மாதம் நிறைவடைந்ததை கொண்டாடும் பண்டிகையாகும். பிறை தெரிவதன் அடிப்படையிலேயே ரமலான் நோன்பு துவக்கம் மற்றும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.

ரமலான் வரலாறு:

இஸ்லாமிய நம்பிக்கையின்படி, முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக ரமலான் நோன்பை அனுபவிக்கிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை அனுசரிக்கப்படும் இந்த ரமலான் நோன்பு இஸ்லாத்தின் ஐந்து தூண்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. நிலவின் பிறைக்காட்சியின்படியும், ஹதீஸ்களில் தொகுக்கப்பட்டுள்ள பல்வேறு வாழ்க்கை வரலாறுகளின்படியும் 29-30 நாட்கள் இருக்கலாம். ரமதான் என்ற வார்த்தையானது, அரேபிய வார்த்தை ரமிதா அல்லது அர்-ரமத் என்பதிலிருந்து தோன்றியுள்ளது. மக்காவில் இருந்து மதீனாவிற்கு இசுலாமியர்கள் குடியேறிய இரண்டாம் வருடத்தில், ஷப்பான் மாதத்தில் ரமலான் நோன்பு நோற்க வேண்டும் என்பது கட்டாயமான கட்டுப்பாடாக இருந்தது. நோன்பு தொடங்குவதற்கு முன்னதாக எடுக்கப்படும் உணவானது 'ஸஹர்' எனவும் நோன்பு முடிந்த பின் எடுத்துக் கொள்ளப்படும் உணவானது 'இப்தார்' எனவும் குறிப்பிடப்படுகிறது.