ICAI Logo (Photo Credit: Wikipedia)

மார்ச் 28, டெல்லி (Delhi News): இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் (ICAI) சார்பில் சிஏ எனும் பட்டயக் கணக்காளர் பணித்தேர்வு ஆண்டுதோறும் இருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிஏ தேர்வு அடிப்படை, இடைநிலை, இறுதி என 3 நிலைகளில் நடத்தப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஆடிட்டராக முடியும். பட்டப்படிப்பை முடித்தவர்கள் மட்டும் அடிப்படைத் தேர்வை எழுதாமல், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வை எழுதினால் போதுமானது. File Income Tax Return: வருமான வரி அறிக்கை தாக்கல் செய்துவிட்டீர்களா? முழு விபரம் இதோ.!

சிஏ தேர்வு முறையில் மாற்றம்:

தற்போது, இந்த சிஏ தேர்வு (CA Exams) முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இறுதித்தேர்வு, இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வந்த சிஏ தேர்வு இனி ஜனவரி, மே, செப்டம்பர் ஆகிய மாதங்களில் நடத்தப்படும். மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது' என இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.