Death File Pic (Photo Credit : Pixabay)

மே 22, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை தகிசர் கிழக்கு மிஸ்கிதா நகர் பகுதியில் வசித்து வருபவர் சாவ்லா. இவர் துணி வியாபாரி ஆவார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, மகள் இருக்கின்றனர். 16 வயதுடைய சாவ்லாவின் ஒரே மகள் ஜான்வி அங்குள்ள சர்வதேச பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வானம் ஆரஞ்சு நிறத்தில் ரம்யமான காட்சிகளாக தோற்றமளித்தது.

செல்பி எடுக்க முயன்று பறிபோன உயிர் :

இதனால் வானத்தின் அழகை படம்பிடிக்க விரும்பிய சிறுமி, தந்தையிடம் அனுமதி கேட்டு வீட்டின் எட்டாவது மாடிக்கு சென்றுள்ளார். மொட்டை மாடியில் இருந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்த சிறுமி பக்கவாட்டு சுவற்றில் அமர்ந்தபடி செல்போனில் செல்பி எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது நிலை தடுமாறிய சிறுமி எட்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். கணவர் மீதுள்ள கோபத்தால் அதிர்ச்சி செயல்.. போலிக்கணக்கு தொடங்கி மனைவி செய்த அட்டூழியம்.! 

சிறுமியின் உடலைக்கண்டு கதறியழுத பெற்றோர் :

பலத்த காயமடைந்த சிறுமியை உடனடியாக மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிர் இழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் சிறுமியின் பெற்றோர் அவரது உடலைக்கண்டு கதறியழுதது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.