அக்டோபர் 01, சீனா (Sports News): சீனாவில் உள்ள ஹாங்சூ நகரில், ஆசிய விளையாட்டுப்போட்டிகள் 2022 நடைபெற்று வருகிறது. 39 பிரிவுகளாக நடக்கும் போட்டியில், ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகள் பலவகை விளையாட்டுகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று வருகிறது.
இந்தியா தற்போது வரை 10 தங்கப்பதக்கம் உட்பட 41 பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவர் டிராப் (Men's Trap Shooting Team) சூட்டின் குழு போட்டியில் கியனன் சேனை, சோர்வர் சிங்கர், பிரித்தவ்ராஜ் தொண்டைமான் ஆகியோர் வெற்றி அடைந்துள்ளனர். Dell Research Development Office: பெங்களுருவில் புதிய ஆராய்ச்சி முனையத்தை உருவாக்க விருப்பம் தெரிவித்துள்ள டெல்: கர்நாடக அரசு ஆலோசனை.!
அக்டோபர் ஒன்றாம் தேதியான இன்று, மாதத்தின் தொடக்கத்தில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. மூவரும் 361 புள்ளிகளை பெற்று வெற்றிவாகை சூடி இருக்கின்றனர்.
இந்த பதக்கம் இந்தியாவுக்கான 11 வது தங்கப்பதக்கம் ஆகும். மொத்தமாக இந்தியா 11 பதக்கங்களை பெற்றுள்ளது. ஆடவர் டிராப் ஷூட்டிங் போட்டியில் குவைத் வெள்ளிப்பதக்கமும், சீனா வெண்கலப்பதக்கமும் பெற்றுள்ளது.
🥇 Gold Rush Alert! 🥇 #AsianGames2022
Shooters @tondaimanpr, #KheloIndiaAthlete @KynanChenai, and Zoravar Singh Sandhu have shot their way to GOLD in the Men's Trap Team event! 🎯 with an Asian Games record of 361 ⚡
Their precision, focus, and teamwork have brought glory… pic.twitter.com/7pAakYlsaj
— SAI Media (@Media_SAI) October 1, 2023